தமிழகம் ராமேஸ்வரம் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற ஆடித்தேரோட்டம்!

299

தமிழகம் ராமேஸ்வரம் ஆலயத்தில் ஆடித்தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

தீர்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணியத்திருத்தலம் காசிக்கு நிகரானது. கடந்த மாதம் 27ஆம் திகதி கொடியேற்றத்துடன், இவ்வாலயத்தின் ஆடித்திருவிழா ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் 17 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், ஒன்பதாம் நாளான இன்று தேர் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தபசுமண்டகப்படி 6ஆம் திகதியும், 7ஆம் திகதி அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் – அருள்மிகு இராமநாதசுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்றும் வட மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் நோக்கி வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE