தமிழக மக்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை

327

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் கொழும்பில் இன்று நடைபெற்றன.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு – கொம்பனிவீதியிலுள்ள ஸ்ரீசிவசுப்ரமணியம் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த விசேட பூஜை வழிபாடுகள், இலங்கை – இந்திய மீனவ நலன்துறை அமைப்பின் ஆலோசகர் எஸ்.பீ.ஆந்தோனிமுத்துவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மீண்டும் வழமை நிலைக்கு திரும்ப வேண்டியும், வெள்ளத்தினால் உயிர்நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டியுமே இந்த விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

SHARE