தமிழக வீரர்களுக்கு சுரேஷ் ரெய்னா அளித்த நம்பிக்கை

556

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா சமீபத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிக் குறித்து நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் முதன்முறையாக தமிழகத்தில் நடக்கிறது.

இந்த போட்டியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதில் சிலர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டியிலும் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த போட்டிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதை,தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மிகச் சிறந்த முயற்சியாக கருதுகிறேன்.

எனவே இந்த போட்டிக்கு எல்லோரும் தங்களது ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை அணிக்கான தடை நீங்கிய பின் மீண்டும் சென்னை அணியில் விளையாட இருப்பதாகவும், தனது சொந்த ஊர் போன்றே சென்னையை கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE