ஸ்வாதி, ராம்குமாரை சுத்தமாக மறந்து போனோம்…! ராம்குமார் மரணம் இனி தற்கொலை தான்…! இனி அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே..!
இப்படி இருக்கையில் ராம்குமாருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பிரான்ஸ் தமிழச்சி மீது நிறைய வழக்கு போடப்பட்டது. அதற்கும் அவர் அசரவில்லை.
முதல்வர் உடல் நிலை பற்றிய அவரின் மோசமான பதிவு பல தரப்பிலும் கண்டனம் செய்யப் பட்டது..!
அதன் பின் அவர் முற்றிலும் அமைதியாகி விட்டார். அவர் ஏன் இப்படி திடீர் என்று சைலன்ட் ஆனார் என்று அனைவருக்கும் குழப்பம். இந்த விஷயமாக ஒரு தகவல் ஒன்று உலாவருகிறது.
அதாவது மத்திய அரசின் செல்வாக்கு மிக்க ஒருவர், பிரான்ஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தாராம்.
தமிழச்சி பிரான்ஸ் நாட்டு குடி உரிமை பெற்றவர். அவர் இந்திய மற்றும் தமிழக உள் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதும், தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது. விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்க..
அதன் பின்தான் தமிழச்சி அமைதியானாராம்…! முகநூலில் பதிவுகளும் இடுவதில்லை.