(தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய புதுவருட வாழ்த்துச் செய்தி)
இன்று புதுவருடம் மலர்ந்திருக்கிறது. மொழி, இனம், மதங்களைக் கடந்து அனைவரும் இந்த புதுவருடத்தைக் கொண்டாடுவது சிறப்பானதாகும். இப்புதிய வருடம் அனைத்து மக்களதும் வாழ்க்கையில் சிறந்ததாக இருக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். இதற்காகவே அனைவரும் தத்தமது வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று பிரார்த்தித்து புத்தெழுச்சியைப் பெறுகிறார்கள்.
இப்புதிய வருடத்தில் அனைவரும் நற்பிரஜைகளாக வாழவேண்டும் என்று பிரார்த்திப்பதோடு, இலங்கையைப் பொறுத்தவரை கடந்த ஒக்ரோபர் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னர் ஓரளவு சுமுகமாக இருந்தாலும், தற்போதும் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையிலான உறவில் பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை. இவையணைத்தும் சரிசெய்யப்படவேண்டும். அனைத்து மக்களும் சமாதானமாக வாழவேண்டும். அதற்கு இப்புத்தாண்டு வழிசெய்யட்டும் என தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.