தமிழரசுக் கட்சியின் பவர்ப்பிளே ஆட்டம் ஆரம்பம் – ஈபிஆர்எல்எவ் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனை உள்வாங்கிக் கொண்டது தமிழரசுக்கட்சி.

228

கடந்த வடமாகாணசபைத் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்களுக்கு சீற் வழங்கியது ஈபிஆர்எல்எவ் கட்சி இருந்தும் இக் கட்சிக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக பலபத்துக் காரணங்கள் இருந்தும் அதனை வெளிப்படுத்தமுடியாது எனக்கூறும் பராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அக்கட்சிக்குத் துரோகத்தை விளைவித்துள்ளார் என்பதே ஆகும். இவரை உள்வாங்கிக் கொண்டது தமிழரசுக் கட்சிக்கு மிகுந்த பயனைக் கொடுத்தாலும் ஈபிஆர்எல்எவ் கட்சியினுடைய செயற்பாட்டை சீர்குலைக்கும் ஒரு நடவடிக்கையாகவே அமையப்பெறுகின்றது. இவர் கட்சியில் இருந்து விலகிக் கொண்டது தொடர்பாக ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காவிட்டாலும். தொலைபேசியினுடாக இவருடன் தொடர்பு கொண்டபோது தான் ஈபிஆர்எல்எவ் கட்சியிலிருந்து விலகியது உண்மைதான், அதே நேரம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டதும் உண்மைதான் நாட்டின் அரசியல் நிலைமைகளைக் கருத்தில்க் கொண்டே எனது முடிவுகளை எடுத்தேன். உங்களுக்கும் கட்சிக்கும் இடையே என்ன முரண்பாடு எனக் கேட்டபொழுது அதனைக் கூறமுடியாது என மறுத்தார் சிவமோகன்.
இவ்வாறான நிலையில் ஏற்கனவே டெலோ கட்சியில் உள்ளவர்கள் தமிழரசுக் கட்சியின் செல்லப்பிள்ளையாக செற்பட்டு வருகின்ற அதேநேரம் புளோட் ஈபிஆர்எல்எவ் கட்சியில் உள்ள அங்கத்தவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கிக் கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் தவறென கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொழுது அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். இவ்வாறான நிலையில் அடுத்தடுத்த தேர்தல் காலங்களில் இன்னும் பல பிளவுகள் ஏற்படும் நிலைக்கு இந்த தமிழரசுக் கட்சி வழிவகைகளை ஏற்படுத்துகின்றது என்றும் அவர் கூறினார். இவ்வாறாக இருப்பினும் வைத்திய கலாநிதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவமோகன் அவர்கள் இக்கட்சிக்கு பாரியதூரோகத்தை விளைவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

222
இதே வேளை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது சிவமோகன் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்;டுள்ளார் என்பதை உறுதிப்படுத்திய அவர் யார்வேண்டுமென்றாலும் எமது கட்சியில் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் அதற்கு நாம் தடையில்லை. மேலதிக விபரங்களை தற்போது கூறமுடியாது என்பதையும் அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவினுடைய கட்சியில் இருந்தவர்களைப் பிரித்தெடுத்து இன்று கூட்டு அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டது போல் ஏனைய கட்சியில் உள்ளவர்களையும் தமிழரசுக் கட்சி உள்வாங்கிக் கொண்டு ஆட்சி நடத்தத் தீர்மனித்துள்ளது என்றே கருதவேண்டும்.
ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சியில் இணைவதற்கு உரிமை இருக்கின்றது அது அநாகரிகமான முறையில் நடைபெற்றிருக்கின்றது என்பது தமிழ்க்கட்சிகளுக்குள் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கின்றது எனலாம்.

SHARE