தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா வன்னி-இன் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இந்த கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெறுகின்றது.
இந்த கலந்துரையாடலில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், புதிய அரசியலமைப்பு, மக்களுக்கான தீர்வுத் திட்டம், காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (01ம் இணைப்பு)