தமிழரசுக் கட்சியின் வேட்புமனுத் தாக்கல் இன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் போது பொது மக்கள் சகிதம் வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு வருகை தந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஏனைய அங்கத்தவர்களையும் படத்தில் காணலாம்.
செல்வம் அடைக்கலநாதன்
அண்ணாமலை நடேசுசிவசக்தி
மாசிலாமணி றோய்ஜெயக்குமார்
கந்தையா சிவநேசன்
சிவப்பிரகாசம் சிவமோகன்
சாந்தி சிறீக்கந்தராசா
இருதயநாதன் சாள்ஸ் விமலநாதன்
பெருமாள் பழனியாண்டி
சு.நோகராதலிங்கம்
Posted by Thinappuyalnews on Friday, July 10, 2015
Posted by Thinappuyalnews on Friday, July 10, 2015
Posted by Thinappuyalnews on Friday, July 10, 2015
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கிலுள்ள 4 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று வெள்ளிக்கிழமை 2.30 மணிக்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது. யாழ்ப்பாணத்தில் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று பி.ப. 2.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுவைத் தாக்கல் செய்தது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் – மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ம.ஆ.சுமந்திரன், ந.ஸ்ரீகாந்தா, சிவஞானம் சிறீதரன், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன், நெ.மதினி ந.ஆனந்தராஜ் ஆகியோரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
Posted by Thinappuyalnews on Friday, July 10, 2015
மட்டக்களப்பில்… தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதம வேட்பாளருமாகிய பொன் செல்வராசா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் மாவட்டச் செயலகத்திற்கு சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் – பா.அரியநேத்திரன்(அம்பிலாந்துறை),பொன்.செல்வராஜா(கல்லாறு), சீ.யோகேஸ்வரன்(வாழைச்சேனை), இரா.துரைரெத்தினம்(காரைதீவு), கோ.கருணாகரன் (செட்டிபாளையம்), சிறிநேசன் (மகிழடித்தீவு), ஏ.ஏ. அமல் (செங்கலடி), ஜீ.சவுந்தரராஜன் (மட்டக்களப்பு) ஆகியோரின் பெயர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரதம வேட்பாளர் பொன். செல்வராசா தெரிவித்தார்.