தமிழரசு கட்சி தலைவராக திருமலையில்187 வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடினார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

125

 

தமிழரசு கட்சி தலைவராக திருமலையில்187 வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடினார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்


தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தான் அனுப்பப்பட்டதன் இறுதி இலக்கை இன்று சுமந்திரன் அடைவாரா ?
பேரினவாதிகளின் ஆசியுடன் கூட்டமைப்பிற்குள் சுமந்திரன் அனுப்பிவைக்கப்பட்டதன் இலக்குகள்
1.தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுத்துச் செல்லல்.
2. தமிழ் மக்கள் நேசித்த விடுதலைப் போராட்டத்தையும் விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்துதல்
3. தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்தல்
4. தமிழரசு கட்சியை உடைத்தல்
இவற்றை குறிவைத்து இயங்கி வந்த சுமந்திரன் இன்று தலைமை பதவிக்கான போட்டியில் வெற்றி பெறுகின்றாரோ இல்லையோ தமிழரசு கட்சியை உடைப்பதில் அனேகமாக இன்று வெற்றி பெற்று விடுவார். அவருடைய இலக்கும் அதுதான்.
தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த சம்பந்தனின் காலையும் வாரி விட்டார் சுமந்திரன். இன்று சுமந்திரன் தலைமை பதவிக்கு வருவதை சம்பந்தனும் விரும்பவில்லை.
கடந்த தேர்தலில் சுமந்திரனின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்த போது சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து அவருடைய ஆதரவையும் கோரினார்.
இன்றுவரை தமிழரசு கட்சி சார்பில் வடக்கில் ஒவ்வொருமுறையும் சிறிதரனே அதிக விருப்பு வாக்கை பெற்று வருகின்றார். ஆகவே சிறிதரனின் ஆதரவு கிடைத்தால் அவருக்கு வாக்களிப்பவர்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றை தனக்கு வழங்குவார்கள் அதன் மூலம் தனது வெற்றி உறுதி செய்யப்படும் என்று நம்பினார்.
இருந்த போதும் இறுதியில் ஏனைய வேட்பாளர்கள் வெளியே காத்திருக்க வாக்களிப்பு நிலையத்திற்கு உள்ளே சென்று “டேய் கள்ளா” பட்டப் பெயருடனே வெற்றி பெற முடிந்தது.
“சர்வதேச விசாரணை முடிந்து விட்டது மீண்டும் அதனை கோர முடியாது “
“விடுதலை புலிகளின் பலவந்த ஆட் சேர்ப்பு , போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை வேண்டும்”
” விடுதலை புலிகளின் இன‌சுத்திகரிப்பை எண்ணி தலை குனிகின்றேன் “
“போரில் கொல்லப் பட்ட இராணுவத்தினரையும் சேர்த்தே நினைவு கூருகின்றோம் “
ஆகியன இவரது பிரபல அரசியல் கூற்றுக்கள்.
நல்லாட்சி அரசில் நம்பிக்கை உள்ளது. ஓ.எம்.பி. அலுவலகம் நல்லது என்று ரணில் அரசை‌ பிணையெடுத்தமை
வட மாகாண சபையில் தனது பேச்சையும் மீறி இனப் படுகொலை தீர்மானம் நிறைவேற்றிய விக்கிக்கு எதிராக தனது அல்லக்கைகள் மூலம் குழப்பங்களை ஏற்படுத்தியமை.
யாழ் மாநகர சபை மேயர் தெரிவின் போது தனது கட்சி வேட்பாளரையே சதி செய்து தோல்வியுற செய்தமை
இவ்வாறு இவரது அரசியல் சாதனைகளை அடுக்கி கொண்டே செல்லலாம்.‌
ஆகவே இவ்வளவு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சுமந்திரன் தமிழரசு தலைமை பதவிக்கு வந்தால் அதற்கு பின்னர் தமிழரசு கட்சியின் வளர்ச்சி பற்றி சொல்ல தேவையில்லை. சுமந்திரன் தமிழரசு கட்சிக்குள் வந்த பின் தமிழரசு கட்சியின் வாக்கு வங்கி அதிகரிப்பை பார்த்தே இதனை உணரலாம்.
SHARE