வடக்கில் உள்ள தமிழர்களின் வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என கோரி வரணி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக கவனயீர்ப்பு உண்ணா விரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
வரணி பகுதியை சேர்ந்த நா.துஷாந்த் என்ற இளைஞனே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை இன்றைய தினம் காலை 8 மணி தொடக்கம் முன்னெடுத்து வருகின்றார்.
வடமாகாண முதலமைச்சரை சுதந்திரமாக செயற்பட விடுங்கள், முதலமைச்சர் மீது அவதூறு செய்யாதீர்கள், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், தமிழ் மன்னர்களின் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்ற 4 கோரிக்கையை முன்வைத்து, யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக குறித்த இளைஞன் மேற்படி கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றார்.