தற்போது வரை எமது தமிழர்களால் மேற்கொள்ளப்படும் செயலும் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவந்த பல விடயங்களும்; திருத்தப்பட வேண்டியவை என்றும் பல ஆக்கங்கள் ஊடாக வெளிக் கொணர்ந்தேன். ஆனால் எமக்குத்தான் புத்தி செல்வது பிடிக்காதே! தலைக்கணம் எம்மை ஆட்டிப்படைக்கின்றதே!
அமேரிக்கா தனது ஆதிக்கத்திற்கப்பால் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் நடாத்தப்படும் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் இந்த வேளையில் இலங்கை அரசு தமிழர்களுக்கெதிராக நடாத்தும் போர் என்று எம்மால் எடுத்துரைக்கப்படும் இந்நாளில் இலங்கை அரசு அமேரிக்காவிற்குச் சொல்லப்போகும் பதில்???
நாம் நமது போராட்டத்தில் இன்று காட்டும் அக்கறையில் தமிழர்களுக்கான விழடிவில் அக்கறை குறைவாக உள்ளதே உண்மை என்பதனை ஏற்க மறுக்கின்றோம். உண்மைகளை 2007ல் வெளியிட்ட எனது நாவலில் வெளிப்படையாக எழுதிய போது, அந்நாவலை எதிர்த்தோர் தற்போதாவது அதனை உணர சந்தர்ப்பங்கிடைத்துள்ளது. அந்நாவலின் சில பகுதிகள் இங்கு காட்டப்படுகின்றது.
“அடிதடி 6”
இலங்கை அரசியல் பற்றிய தீர்வு
கடந்த கால நடைமுறைகள் எமக்குக் கற்றுத்தந்த பாடம்: இலங்கையின் பிரச்சனை தீர்வுக்கு அற்ற கனவுகள். இலங்கையில், தமிழ் மக்களின் உயிர்ச் சேதத்தையோ வாழ்க்கைச் சிதைவினையோ எண்ணிப் பார்த்ததாக யாரும் இல்லை. அவரவர் தமது தேவைகளையும் இலாபத்தையும் காத்துக் கொள்வதோடு தமக்கு முக்காடும் போட்டுக் கொள்கின்றனர்.
இலங்கை அன்னையின் இரத்தக்கறையும் வேர்வைத்துளியும் துடைக்கப்பட வேண்டுமென்றால், ஒரேயொரு கட்டமைப்புக்குள் வந்தாலொழிய, தீர்க்கப்படப்போவதில்லை.
அது, ஓர் “ஐக்கிய அரசின்” கீழ் இரு தனி அதிகாரங்கள்.
இலங்கை எப்போதும் தனது குடைக்குள்ளே இருந்து கொள்ள, இருதனித் தனி அதிகாரங்கள், சிங்களத்துக்கெனவொன்றும் தனியதிகாரங்கள் தமிழுக்கென்றும் பகுக்கப்பட்டு, இருபாலரிடமும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவரால் ஒரு குடையில் இலங்கை ஆட்சி செய்யப்பட்டாலே ஒழிய, நிம்மதிப் பெருமூச்சு யாரும் விடமுடியாது என்பது உறுதி.
குறிப்பாக, சிலவருட அனுபவ ஆட்சியின் பின்னரே இரு தனி நாடுகளாக்கும் நடவடிக்கைகள் பற்றி சிந்தனைகள் செலுத்தப் படவேண்டும்.
இங்க குறிப்பிடும் “ஐக்கியக்கட்டமைபு” சாலச் சிறந்தது என்பதனை உற்று நோக்கவும்.
இதனால் முக்கியமாக நாட்டின் நலம், இறைமை, அபிவிருத்தி,கல்வி, மதம், கலாசாரம், பலம், போன்றன உலகத்தின் பார்வைக்கும், தமிழ் – சிங்கள மக்களிடையே ஏற்படப்போகும் சினத்திற்கும், தமிழ்சிங்களவர் கலந்த பகுதியினரிடையே மேலும் ஏற்படக்கூடிய பிளவிற்கும் தீர்வு காணமுடியும். மட்டுமல்லாது, தமிழர்களைப் போன்றுள்ள மற்றையச் சிறுபான்மையினருடைய விதண்டாவாதத்திற்கும் எதிர்காலத்தில் தோன்றக் கூடிய இடைய+றுகளுக்கும் தீர்வு காணமுடியும். இதன்மூலம் இலங்கையின் புதிய யாப்புமுறையினை மாற்றி, தேசிய யாப்பினை உருவாக்கியாகவேண்டும். அதன்பின்னர் நாட்டின்நலன்கருதி இரு நாடுகளாகத் தேவையிருப்பின் பிரிக்க வேண்டும்.
இலங்கையில் அண்மையில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி சில தகவல்கள்…
LANGUAGES: Sinhala, Tamil, and English
RELIGIONS: Buddhism, Hinduism, Islam and Christianity
POPULATION (1981 Census)
Total Population————————14,850,000
Percentage Sinhalese——————–74.0%
*Percentage Sri Lankan Tamils————12.6%
*Muslims———————————-7.1%
*Indian Tamils—————————-5.6%
Others———————————–0.7%
Percentage Sri Lankan Tamils in Northern Province—–6.5%
Percentage Sri Lankan Tamils in Eastern Province——2.7%
Percentage Sri Lankan Tamils in rest of country——-3.4%
வெளிநாட்டைப் பொறுத்த வரையில், தமிழர்கள் அண்ணளவாக 800,000 பேர் உள்ளதாக கணிப்பீடு குறிப்பிடுகிறது.
இந்த வீதாசாரத்தில் பார்க்கும் போது தமிழீழம் கிடைத்தால், வீதாசாரத்தில் அதிகமுள்ள சிறுபான்மை முஸ்லீம்களும், தமக்கென சுதந்திர தேசத்தைக் கேட்டாலும் அது தவறாகக் கருத முடியாது. இல்லை தமிழ் என்று பார்த்தால், தமிழீழத்தில் தமக்குமானிலசுயாட்சி வேண்டுமென்று, அல்லது அதில் தமக்கும் தனிதேசம் வேண்டும் என்று போராடினாலும் விவாதிப்பதற்கில்லை.
மேலும் மலையகமக்களும் குறிப்பிட்ட வீதத்தில் உள்ளனர். தமிழ் என்ற ரீதியில் மொத்தமாகப் பார்த்தால்தான் நாம் 26மூ அப்படியிருந்தும் மூன்றில் ஒருபங்குதான் நாம், எனவே தமிழர்கள் தமது போராட்டத்தில் கவனத்தோடு காய்களை நகர்த்த வேண்டும். இல்லையேல் இருப்பதும் பறிபோக வாய்ப்புண்டு. இதையறிந்தே த.வி.புலிகள் ஆரம்பகாலத்தில் முஸீம்மக்களை (சிங்களவர் உட்பட) யாழ் பிரதேசத்தில் இருந்து முற்றாக அகற்றினர் போலும். (சிங்கள அரசு இதற்கு மாறாக சிங்கள குடியேற்றத்தை தமிழ்ப் பிரதேசங்களில் புகுத்துவதும் குறிப்பிடத்தக்கது)
இக்கட்டமைப்பினை, இலங்கையின் அபிவிருத்தி, இலங்கையரின் நலம் என்பவற்றைக் கருத்திற் கொள்ளும் எவரும் எதிர்க்க முன்வரார். மாறாக இலாபக்காரர், சுயநலங்கருதுவோர், தற்பெருமை மற்றும் பதவி வெறிகொண்ட எவரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார் என்பதில் ஐயமில்லை. இக்கருத்துக்கள் இன்று நேற்றல்ல என்னிடம் இருந்து உதித்தது. பல வருடங்களுக்கு முன் இது தொடர்பாக வெளியிட்ட போது அவற்றைப் பிரசுரிக்க எவரும் முன்வரலில்லை (தற்போதுங்கூட) காரணம், கருத்துக்களை ஆழமாக அலசாமல் முடிவுகளை எடுப்போர் தற்போது ஊடகவியலாளர்களாக இருப்பதே. (ஒருசிலரை தவிர)
இக்கட்டமைப்பில் தமிழீழம் கொச்சைப்படுத்தப் படுவதாதக ஒருசிலர் பொய்ச்சாட்டுத் தேட முனைவர். ஆனால், ஒப்பீட்டளவில் தமிழர்களை விட சிங்களவர் அதிகமே. மேலும் இலங்கை எமது தாய்நாடு. இத்தனை காலமும் அவளின் அரவணைப்பிலேயே குளிர்காய்ந்திருக்கிறோம், என்ன, அவள் பெயரைச்சொல்லி ஆட்சியில் அமர்வோர் தமிழுக்குக்கொடுக்க வேண்டிய தக்க உரிமைகளைக் கொடுக்கவில்லை அவ்வளவுதான். அதனை தமிழ்க் கட்சிகள் நிவர்த்தி செய்திருக்கலாமே! இல்லாவிட்டால், அல்லது முடியாவிட்டால், முற்றுமுழுதாக தமிழ்க்கட்சிகள் அனைத்துத் தேர்தல்களையும் தெரிவின்பின் நிராகரித்திருக்கலாமே! தமது அதிதிருப்தியைத் தெரிவித்திருக்கலாமே! ஏன் அப்படிச் செய்யவில்லை?…
இதன் மூலம் ஏற்படவிருக்கும் இருபக்க உயிரிழப்பினைத் தடுக்க முடியும் என்பது எனது உறுதி.
இக்கட்டமைப்பினை;படி நோக்குவோமேயானால்… முடிவு தொலைவிலில்லை என்பது திண்ணம். இங்கு மற்றொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும், இடைக்காலத்தன்னாட்சி அதிகாரசபைக்கும் இங்குகுறிப்பிடும் வரைபிற்கும், பொருளாதார ரீதியிலும், சமாதான ரீதியிலும் உரிமைகளிலும், அரசியல் செயற்பாடுகளிலும் சர்வதேசச் செயற்பாட்டிலும் பாரிய வேறுபாடுகள் உண்டு.
இலங்கையில் ஆட்சிசெய்யும் கட்சியின் கொடியை, அரசின் கொடியாக மாற்றுவது போல் சட்டங்களை உருவாக்குவோமேயானால், நாட்டின் தேசியக்கொடியானது நாளுக்கு நாள், காலத்துக்குக் காலம் மாற்றப்பட்டுக் கொண்டேயிருக்குமல்லவா!?
அது போல, தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியினை, “தமிழீழத் தேசியக் கொடி” என்று உறுதிப்படுத்துவது, பொருத்தமற்றது என்று எண்ணத் தோன்றுகிறது. அது உண்மையுங் கூட. தமிழீழத்திற்கென்று ஒரு கொடி அமைக்கப்பட வேண்டும். அது ஒரு நாட்டின் ஆழுமையினையும், இறைமையினையும், கலாசாரத்தையும், பண்பாடுகளையும், அமைதியையும், பாதுகாப்பையும், மேம்பாட்டையும் உறுதிப் படுத்துவதாக அமவேண்டும். கத்திவைத்திருக்கும் சிங்கக்கொடியை எதிர்த்து துப்பாக்கி வைத்திருக்கும் புலிக்கொடியை ஆதரிப்பது ஈழநாட்டைக் கௌரவப்படுத்துவதாக நினைத்து விடக்கூடாது.
மேலும், சிங்கள அரசு தமிழ் இனத்தின் பிரதிபலிப்பு போதிய அளவு காட்டத்தவறியது என்ற குற்றச்சாட்டு இருக்கும்போது, தமிழ்தேசியக்கொடி என்று புலிகளால் பிரயோகிக்கப்படும் கொடியில், முஸ்லீம் இனத்தின் பங்கு என்ன??? இலங்கையின் தேசியக்கொடியில் ஓரங்கட்டப்பட்ட நிலையில் தமிழும் முஸ்லீமும் இருப்பது தவறானதே! அதில் எவ்வித சாதகமான சாட்டு சொல்வதற்கும் இல்லை.
இரத்தம் சிந்திக் கிடைக்கும் தமிழீழமாவது, சாந்தமானதாக இருக்கக்கூடாதா? எமது உறவுகள் எமது இனம் என்பதற்காகத் தவறாகப்பட்டதை சாதகமாகச் சொல்வது எனக்கு உகந்ததல்ல. சுயசிந்தை உள்ளோர் சிந்தித்தால் போதும். எவரையும் மூளைச்சலவை செய்ய முயலவில்லை.
தமிழீழதேசியக் கொடி பற்றிய ஒரு பத்திரிகைத் தகவல் இங்கு காட்டபக்படுகிறது. பல்வேறு வரலாறுகள் திரிபு பட்டும் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் போவதற்கான காரணங்கள் எழுத்தாளர்கள் பலர் வரலாற்று எழுத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதிலும் பார்க்க, அக்காலத்து அதிகாரத்திற்கும் பாராட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதன் அடிப்படையே தமிழ் பழம் பெரும் வரலாற்றில் உண்மைகள் மறைந்து போகக்காரணமாக இருக்கின்றன. இதனுடன் இன்னொன்றையும் போட்டாகவேண்டும், அதாவது தமிழீழக்கட்டமைப்பு அதாவது அரசியல் யாப்பு என்ன என்பது எனக்கு வினாவாகவே உள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு தேசிய விடுதலை அமைப்பு ஐனநாயக ரீதியில் ஓர் அரசியல் கட்சி, அவர்களால் அரசாங்கம் அமையுமாயின், அது சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலீச குடியரசின் பிரதான பலம் பொருந்திய கட்சியாகக்காணப்படும். நல்ல ஆழுமையுடைய தலைவரைக் கொண்டதால் தொடர்ச்சியாக அவரே ஆட்சியமரக்கூடிய சாத்தியக்கூறினை ஏற்படுத்தவும் முடியும். (உ.ம்-கூபா) ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களால் இச்சின்னம் தேசியக் கொடியாக அங்கிகரிக்கப்பட்டது. ஆனால் சுதந்திரத் தமிழீழம் என்று பார்க்கும் போது புலிச்சின்னம் மக்களின் தாகத்திற்கு நீர் கொடுத்தது. எனவே அது தேசிய விடுதலையின் சின்னம். தேசிய, தாயகத்தின் சின்னம் என்ற ரீதியில்… சிந்திக்கத் தோன்றுகிறதல்லவா?
மேலுள்ளவைகள் அமைப்புக்களிக் சின்னங்கள், கீழுள்ளது தற்போதைய இலங்கை நாட்டின் கொகொடி. இக்கொடி இலங்கையை ஆழுகின்ற ஒரு கட்சி அல்லது அமைப்பின் கொடியாக மாட்டாது.
உலகம் மன்னராட்சியில் இருந்து மக்களாட்சிக்கு மாற்றப்படும் போது, இங்குமட்டும் மாறாகவா இடம்பெறும்!?!
ஆரம்பகாலத்து யாழ்ப்பாணத்தில் இருந்த அரச கொடியையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஏன் இப்படி ஒரு புதிய,
சாந்தம் மற்றும் கலாசாரம், விழுமியம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் கொடி ஒன்றை தமிழீழத்திற்காக உருவாக்கப்படக் கூடாது?.
இன்று நடந்து கொண்டிருக்கும் போர், விடுதலைக்காகவோ தன்மானத்திற்காகவோ நடைபெறுவது போல் இல்லாமல், வியாபாரத்திற்காக நடப்பது போல் காணப்படுகிறது. இவ்வாறான விமர்சனங்களுக்குக் கொடுக்கப்படும் பட்டம் “தேசத்துரோகி”இ இல்லையென்றால், தமக்குத் தாமே புதிய பெயர்களை உருவாக்கி, எதிர்ப்பாளிகளாக தம்மைச் சார்ந்தவர்களையும் தூண்டி அந்நபரை மரணத்துக்குக் கூடத் தள்ளிவிடுவார். மரணந்தான் எம்மண்ணைப் பொறுத்தவரையில் மலிந்து விட்டதே! அதைவிட, தற்போது பழி போடக்கூடிய வகையில் ஆயுதம் ஏந்திய ஆயிரம் படைகள்தான் இலங்கையில் உள்ள நிலவரமாயிற்றே!.
சிறிய ஒரு விதையில் இருந்து பெருங்காட்டையே உருவாக்கலாம் என்கின்ற போது, “காடுதேவைப்படுகின்றது” விதை எங்கிருந்து வருகின்றது என்று விசாரிப்பது தேவையற்றது!, விதையே தேவையானது.
அரசியல் கட்டமைப்பானது உலகைப் பொறுத்தவரையில், இலங்கை ஒரு அரசு. அதில், எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மாறாக “ஐக்கிய இலங்கைக்குள்” இரு தனி ஆழுமை கொண்ட முழு அதிகாரங்கள் வழங்கப்பட்ட தனி அரசுகள் அமைந்திருக்குமாயின், உலகின் எந்தப்பகுதியும் இதுதொடர்பாகத் தலையிடபோவதில்லை. காரணம் அது ஒருநாட்டின் உட்கட்டுமான மாற்றங்களாகும்.
தற்போது ஒரு வரையறைக்குள் இலங்கையினைக் காட்டினால்:
“ஐக்கிய இலங்கையானது, தாய் அரசின் கீழ்த் தன்னகத்தே, உள்ளிரு தனி அரசுகளைக் கொண்டுள்ள அங்கத்தவரால் தெரிவு செய்யப்பட்டு, மத்திய வங்கி, வெளிநாட்டு அமைச்சு போன்ற பிரதான காரியாலயங்கள் மற்றும் நிதிநிர்வாகம் சட்டம் என்பன ஒன்றாகவும், பல்லின மக்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு” என்று அமையப் பெறவேண்டும்.
விரிவாகச் சொல்லப்போனால்: தமிழீழ மக்களால் (முஸ்லீம் உட்பட) தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசும், சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசும் அமைக்கப்பட வேண்டும்; இங்கு யாருடைய தலையீடும் இடையூறாக அமையாத வகையில் இடம்பெற வேண்டும். பின்னர், இங்கு தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவரில் இருந்து நீதி, நிர்வாகம், நிதி, தேசிய பாதுகாப்பு, போன்றவற்றுக்காக சம அளவில் தாய் அரசின் அதிகாரத்திற்காகத் தெரிவு செய்யப்பட வேண்டும். இங்கு தெரிவு செய்யப்பட்டவர்களால் மட்டுமே “ஐக்கிய இலங்கையின்” பிரதான அதிகாரி (ஜனாதிபதி அல்லது அதிபர்) அமைக்கப்படவேண்டும்.
இவ்வாறு வடிகட்டிய அரச நிர்வாகத்திற்கு மாறாக எடுக்கப்படும் முடிவு, இலங்கை அரசியல் நிலையில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை.
இந்தக் கட்டுமான நிலையிi யாரும் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியோ, பயமுறுத்தியோ அமைத்தல் கூடாது.
நிலமையை நன்கு ஆராய்ந்து மக்களுக்குத் தெளிவாக விளங்கும் வகையில் அறிவிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பொது வாக்கெடுப்பு மூலம் (றீபறன்டம் ஃசநகநசநனெரஅ) அனுமதி பெற்றபின்னர் நிறை வேற்றப்பட வேண்டும்.
இதிலும் தேசிய ரீதியில் எடுக்கப்படும் கணிப்பானது இரு வகையில் கணிக்கப்பட வேண்டும்; அதாவது, 100வீதமுள்ள சிங்களவரில் ஒப்புதல் அளவு, 100வீதமுள்ள தமிழர்களில் ஒப்புதல் அளவு. இதில் கூட எமக்கு சாதகம் இருக்கும் என்று ஈழவாதிகள் உடனே எண்ணிவிடக்கூடாது. ஏனென்றால், முஸ்லீம், மலையகத்தமிழ், வி.பு.ஆதரவற்ற தமிழ்க்குழுக்கள், போன்றனர் தமிழுக்குள் உட்படுகின்றனரே…
ஐக்கிய அதிகாரத்தில் சரிக்குச்சரி அரைவாசி அதிகாரங்கள் காணப்பட வேண்டும். இங்கு அரசுகளே அங்கம் வகிக்க வேண்டுமே ஒழிய கட்சிகளல்ல.
இலங்கையின் போராட்ட காலத்தையும் அதன் இழப்புக்களையும் கணக்கிட்டுப் பார்த்தால், தமிழீழப் போராட்டத்திற்காக இருபக்கத்திலும் இழப்பு அளவுக்கு மீறியதாகவே காணப்படுகிறது. பொருட்சேதங்களை விட்டுவிடுவோம், உயிர்ச்சேதங்களைத் தொட்டுப்பாருங்கள். எமக்குள்ளே கருத்து வேறுபாட்டில் இழக்கப்பட்ட உயிர்கள், அதிலும் இழக்கப்பட்ட புத்தி ஜீவிகளை ஒப்பிட்டுப் பாருங்கள்…!
“சந்தர்ப்பங்களும் சாமர்த்தியங்களும் சாய்ந்து கொடுக்காத போது, உண்மையும், அறிவும் பலன் குன்றிப் போகிறது.”
ஒரு சென்ரி மீற்றர் கோடு ஒன்றைப் போட்டு விட்டு அதனைத் தீண்டாமல் அக்கோட்டினைப் பெரிதாக்கு என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் அரைசென்ரிமீற்றர் கோடு போட்டாராம். மற்றைய கோடு போடுமட்டும் முன்னைய கோடு சிறிதாகத்தான் இருந்தது; இன்னொன்றோடு ஒப்பிடும் போதுதான் அதன் தன்மை புலப்படுகிறது. அது போலத்தான் உலகத்தில் ஏராளம் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஆரம்ப காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வோர் தேசத்துரோகிகள் என்று கருதப்பட்டு கவிதைகள் பல வெளிவரக்கண்டேன்; அவற்றிற்குப் பாராட்டும் கொடுத்துப் பட்டமும் கொடுத்தார்கள். ஆனால், அக்காலத்தில் இருந்தே எனது கவிதைகளில் வெளிநாட்டுக்குச் செல்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்கள் சந்ததிதான் ஈழத்திற்கு மிஞ்சப்போகிறதுஎன்றும், வெளிநாடுகளில் இருந்தே எமது வரலாற்றைச் சித்தரியுங்கள் என பல்வேறு கவிதைகள் கட்டுரைகள் எழுதினேன்; அப்போது அது மதிக்கப்படவில்லை. (இருவது வருடத்திற்கும் முன்னர்)
இப்போது நிலமை எப்படிப்போகிறது…
வெளிநாடுகளில் இருந்து குவிகின்ற பணம் தான் போராட்டபின்னணிக்கான வியாபாரத்தைத் தோற்றுவித்துள்ளது.
பல்வேறு இயக்க அமைப்புக்கள் தோன்றுவதை அக்காலத்தில் இருந்தே பலம் பொருந்திய இயக்க அமைப்புக்கள் எதிர்த்து வந்தன. ஆனால், பல்வேறு தொடர்புச் சாதன இலாப அமைப்புக்கள் தோன்றிவருவதையும், அவை மக்களுக்கு வழங்கிவரும் தொடர்புச் செய்திகள் அதிக செலவில் அமைந்த போதிலும், அவற்றைக் கண்டிக்கவோ அல்லது ஒண்றிணைத்து நல்ல சேவையாகத் தொகுத்து வழங்கவோ ஏன் இவ்வமைப்புக்கள் முன்வரவில்லை.
“சிறு சிக்கலற்ற விடையத்திலே ஒத்துப் போகாதவர்,
எப்படி பெருஞ்சிக்கலான விடையத்தில் ஒத்துப்போவார்”
எவ்வளவோ கஸ்டப்பட்டு அசாதாரணமாக, நாட்டுச் சூழல் காரணமாகவோ, குடும்பச் சிக்கல் காரணமாகவோ ஒருவன் வெளிநாட்டுக்குள் புகுந்து, அவன் சிறையில் அன்னியன் கையில் அகப்பட்டுக் கிடக்கிறான். இதனைக் காரணமாக வைத்து அமைப்புக்களின் சார்பில் உள்ளவர்கள் அவர்களை வெளியில் எடுத்து விடுவதாகச் சொல்லி பேரம் பேசுகிறார்கள். அகப்பட்டுக் கிடப்பவர்களை பயமுறுத்தி அவர்களை, புரியாத மொழிக்குள் இருக்கும் காரணத்தால், திண்டாட வைக்கிறார்கள். சாதாரணமாக அந்நபரை வெளியில் விட்டதும் இவர் வெளியில் வந்ததற்குத் தான்தான் காரணம் என்று சொல்லி 1000€ கறந்து விடுகிறார்கள். இது அமைப்பின் கணக்க்குள் போய்ச் சேருவதில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. அமைப்பும் இது போன்ற பல தவறுகளைக் கண்டு கொள்வதில்லை. காரணம், அவரைப்போன்று செயற்படுவதற்கு இன்னொருவர் கிடைக்கவல்லவா வேண்டும்.
சரி, ஒரு முக்கிய விடையத்திற்கு வருவோம் தமிழீழம் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இல்லை தமிழீழத் தனிப் பிரகண்டணம் செய்யப்பட்டதாக வைத்துக் கொள்வோம். உலகரீதியில் அதற்கு ஏற்படும் மாற்றங்களையும் உலகரீதியில் அவை அமைப்பதற்குள்ள சட்டங்களையும் பார்க்கும் முன் ….
வீதாசாரத்தில் உலக ரீதியில் தமிழர்களைப் பார்க்கும் போது, இலங்கையில் உள்ள தமிழர்களிலும்பார்க்க அதிகமாக வருங்காலங்களில் அமைந்தாலும் அது ஆச்சரியப் படுவதற்கில்லை என்ற அளவிற்குப் போகிறவேளையில், தமிழர்களுக்கான அதாவது, ஈழத்தூதராலயம் என்ற ரீதியில், திழீழவிடுதலைப்புலிகள் ஏற்படுத்தப் போகவிருக்கும் அலுவலகங்களைப் பற்றி யாராவது சிந்தித்ததுண்டா? எமது தேவைகளுக்கு இலங்கை அரசிடம் நாடி நின்றது போல் இனி எங்கு போவது? கடவுச் சீட்டுக்கள், விசாக்கள், மற்றும் ஆவணங்கள்… இவற்றிற்கு நாம் கட்டவேண்டிய கொடுப்பனவுகள் இலங்கை அரசிற்குக் கொடுத்ததை விடக் குறைவாகவா கொடுக்கப் போகிறோம்?… இதற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளை வேற்றுநாட்டவரிடம் இருந்தா கடன் கேட்கப்போகிறார்கள்?…
இலங்கை அரசிடம் இருந்து மீட்டு, நம்மை நாமே கேவலப்படுத்தப் போகிறோமா? அல்லது, இலங்கை அரசு வழங்கிவந்த சேவைகளிலும் பார்க்க பன்மடங்கு புனரமைக்கப்பட்டு கிடைக்கப்போகிறதா? இதையும் பொறுத்திருந்து பார்ப்போம் என்று நையாண்டிச் சாட்டுச் சொல்லும் மக்கள்மத்தியில் எதைச் சொன்னாலும் எடுபடப் போவதில்லை.
வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் கொஞ்சநெஞ்ச கஷ்டங்களாபட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இவற்றையெல்லாம் யார் தீர்ப்பது? தமிழர்களுக்காகவும் தமிழீழத்திற்காகவும் போராட்டத்தில் முன்னணியில் நின்று, இப்போராட்டத்திற்கு மக்களின் பங்களிப்பைக் கேட்டு கொள்ளும் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் தாம் கேட்கவேண்டும். இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நீதி, உலக ரீதியில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நீதியா?
“உயிர், என்னதான் செய்தாலும் மனிதநேயத்தின் முன் ஒன்றுதானே!”
ஆரம்பத்தில் பல இடங்களில் தமிழர்களின் வளர்ச்சியினைப் பாராட்டியிருக்கிறேன். எனினும், நாம் வளர்கிறோம் என்றும், எமக்கு மக்கள் பலம் அதிகம் என்ற வைராக்கியத்திலும், நாம் வேறுநாட்டுச் சட்ட திட்டங்களுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதனை வெளிநாட்டில் இருப்போர் மறந்து விடக்கூடாது. அதன் கவனக்குறைச்சல் மேலும் தமிழர்களின் வாழ்விற்குப்பங்கம் விளைத்தாலும் விளைக்கலாம்.
ஒரு முறை இத்தாலியில் இருக்கும் ஒரு சேவை அமைப்புடன், தமிழீழத்திற்காகப் போராடும் அமைப்புச் சார்ந்த முக்கிய பிரமுகர் சிலரும் ஒன்று கூடலில் இருந்த போது, தமிழர்களுக்கென தமிழர்களிடம் இருந்து பணம் திரட்டுவது தொடர்பாக பேசப்பட்டபோது அந்த இடத்தில் எழுந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
“தமிழீழத்தில் இருக்கும் கஸ்டப்பட்ட மக்களுக்காக நீங்கள் இவ்வளவு அக்கறையுடன் செயற்படுவது பாராட்டக் கூடியது. எனினும், இங்கிருக்கும் ஒருசிலர் (இத்தாலியில்) அவர்களைப் போல் சிரமப்படுகின்றனரே அவர்களுக்கு…?” என்று இத்தாலியில் உள்ள சேவை அமைப்புக் கேட்டபோது;
“அது அவர்களின் தலையெழுத்து- அவரவர் தேடிக்கொண்டது, நாங்கள் அங்கிருப்பவர்களைத்தான் பார்ப்போம்” என்று பிரமுகர் சார்பில் வந்தவர் அருவெறுப்புடன் பதில் சொன்னார்.
“இங்கிருப்பவர்கள் நல்லா இருந்தால் தானே அவர்கள் மூலமாய் மற்றவர்களுக்கு உதவமுடியும்” என்று மீண்டும் கேட்டபோது…
“அது எங்கட வேலையில்லை” என்று சம்மந்தமில்லாது எதையோ பேசத்தொடங்கினார் அவர்.
இவர்களை நம்பி எப்படி தமிழீழத்தை ஒப்படைப்பது?
இவர்களை நம்பி எப்படி ஆவணங்களை ஒப்படைப்பது?
இவர்களை நம்பி எப்படி அதிகாரங்களை ஒப்படைப்பது?
இவர்களை நம்பி எப்படி அலுவலகங்களை ஒப்படைப்பது?…
இவர்களா வருங்காலத்தில் தூதராலயங்களில் அமரப் போகின்றனர்?
இவர்களா ஆவணங்களில் ஒப்பமிடப் போகின்றனர்?
இவர்களை நம்பியா 30 வருத்திற்கும் மேற்பட்ட போராட்டம் இடம் பெற்றது?
இவர்களை நம்பியா எமது உறவுகளைப் பறிகொடுத்தோம்?
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கென்று தமிழீழத்தில் தனி கௌரவம் கொடுக்கப்படும் போது இவ்வாறானவர்களினால், அந்த கௌரவத்தில் கறை விழுந்து விடாதா?
இத்தாலியில் உள்ள ஒரு சில கேவலமான எம்மவரின் வாழ்க்கை முறையினை முறையிட விரும்புகிறேன். காரணம் இவை சீர் செய்யப்படவேண்டும் என்பதற்காக…
(இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் சின்னங்கள் நல்லதொரு எடுத்துக் காட்டுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன என்பதனைக் கருத்திற் கொள்க.)
இலங்கை அரசு த.வி.பு அமைப்பின் செயல் சரியென்று அவர்களைப்பாராட்டுமா? திரு.கருனாவின் செயல் சரியென்று வி.பு.தரப்புத்தான் பாராட்டுமா? கருனா த.வி.பு. இருக்கும்வரையில் அவர் அம்மான் என்றும் அவர் செயல் சிறந்தது என்றும்பாராட்டியவர்கள், 2004ற்குப்பின் அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் பிரிவான ”தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்” என்ற அமைப்பின்மூலம் பங்குபெற்றி பிள்ளையான் என்ற நபரை கிழக்குமாகானத்தின் முதல்அமைச்சராக வந்தும் அவரை ஏற்றுக்கொள்ளாமல், முஸ்லீம் மக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில், அவர் பிளவை ஏற்படுத்துகிறார். என்று, சுமைகள் சாத்தப்படவில்லையா? பிள்ளையான் பதவிக்கு வந்து எந்த எவ்வித நற்காரியமும் செய்யவில்லையா? அவை ஏன் வெளிவரவில்லை?
இல்லை, பிள்ளையான் மூலம் தமிழர்களுக்கு ஒரு சந்தர்ப்பங்கிட்டியுள்ளது அவருக்கும் ஊக்கம் கொடுத்துப்பாத்தால் என்ன? என்று, சந்தர்ப்பம் வழங்கினால் தப்பாய்ப் போய்விடுமா?
அது எப்படி?
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குக் கிடைக்காத பதவி இன்னொரு தமிழருக்குக்கிடைத்துள்ளது?!!!
இத்தனை வருட காலமாக போட்டியிடும் கூட்டணிக்குக்கிடைக்காத பதவி பிள்ளையானுக்குக்கிடைத்துள்ளதே. ஏன் மகிழ்ச்சி வரவில்லை ஏன் ஊடகச் சாதனங்கள் பாராட்டவில்லை?
அப்படிப் பாராட்ட மறுப்பது சரியேயென்றால் தமிழர்கள் யாரும் தேர்தலில் நிற்காது, இருக்கும் பதவியில் இருந்து விலகியிருக்கலாமே! உங்களுக்குக்கிடைத்தால் இனிக்கும் மற்றவருக்குக்கிடைத்தால் கசக்னுகுமா?
கருணாவிற்கு ஐக்கிய ராச்சியத்தில் தண்டணை கிடைக்க வேண்டும் என்று எல்லாரும் கங்கணங்கட்டினீர்களே கருணா யார்? கடந்த காலங்களில் அவரின் பங்களிப்புத்தான் என்ன?
ஆரம்பத்தில் த.வி.பு தவறாகக் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தோர், தற்போது கருணாவைச் சாடினர். இறுதியான அறிக்கைகளில் இலங்கை அரசே இதற்கு உடந்தையாக இருக்கிறது என்ற முடிவு எழுந்துள்ளது. இப்போது, முன்பு சாட்டப்பட்ட குற்றங்கள் என்ன ஆச்சு? இது தொடர்பாக மனித நேய அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்;
மீளத் தலைதூக்கும் பயங்கரம்: இலங்கையில் ‘காணாமல் போதல்கள்’ மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு
என்ற தலைப்பில்,
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் அதற்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கமானது அதன் மோசமான இயலாமையையே வெளிக்காட்டி இருக்கின்றது. கடத்தப்பட்ட அல்லது “காணாமல் போன” தமது உறவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம் கடமையைச் செய்வதில் தவறியுள்ளனர் என்றே மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினால் நேர் காணப்பட்ட பல குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
என்றும்,
இலங்கையில் “காணாமல் போதல்கள்” என்பது மிக நீண்டகாலமாக ஆயுத மோதல் செயற்பாட்டுடன் இணைந்தே நடைபெற்று வந்துள்ளது. 1987 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் இடதுசாரி சிங்கள தேசியவாத அமைப்பான ஜனதா விமுத்தி பெரமுன மேற்கொண்ட குறுகியகால ஆனால் மிக வன்முறையான எழுச்சியின்போதும், தமிழ் தேசியவாத அமைப்பான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்@ர் யுத்தத்தின் போதும் ஏற்;பட்ட ஆயிரக்கணக்கான “காணாமல் போதல்களுக்கு” அரசாங்கப் படைகளே பொறுப்பு என்று நம்பப்படுகின்றது.
தமிழ் வரலாற்றில் இலக்கியத்தில் மட்டும்தான் தமிழர்கள் நல்லவர் போலும். ஏன் இக்கருனாவின் செயல் விடுதலைப்புலிகளின் ஒரு அரசியல் திட்டமாக இருந்திருக்கக்கூடாது? அத் திட்டப்பாதை சறுகியதன் காரணத்தால் தவறு ஏற்பட்டிருந்தால்? இதை எப்படி எடுத்துக்கொள்வீர்! 35 வருடங்கள் பெறுத்த மக்களால் ஒரு சிலவருட மாற்றுப்பாதையை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?.
அவர்கள்தானே த.விபு.ளுடன் இருந்து பல வருடங்கள் செயற்பட்டவர்கள். பல பாராட்டுப்பெற்றவர்கள் நடந்ததை மறந்து விட்டீர்களா?
நமக்குள்ளே இத்தனை தாக்கங்கள் இருக்கும் போது, அன்னியனா சங்கிலியனை நல்லவன் என்று எழுதப்போகிறான் சரித்திரத்தில்?.
அன்னியன் என்று சொல்லும் போது, தமிழர்களுக்கு சிங்கள இனவாதிகள், மற்றும் அமைதி விருப்பற்ற அமைப்பும் உட்படத்தான் சொல்கிறேன்.
சங்கிலியன், போத்துக் கேயருக்கு எதிராகச் செயற்பட்ட மன்னன். அவர்கள் வருகையினையும் ஆதிக்கத்தையுங் கொஞ்சங்கூட விரும்பாமல் எதிர்த்து நின்றவன். அது மட்டுமல்லாமல், போத்துக் கேயர் அரசியலில் தலையிடுவதுமல்லாமல் கத்தோலிக்க மதத்தினைப் பரப்புவதிலும் மிகுந்த அக்கறைகாட்டினர். இதனால் மன்னார்ப்பகுதியில் பெருமளவிலான மதமாற்றம் இடம் பெற்றது. இக்காலத்தில்தான் புனித சவேரியார் சமயப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
எனவே சங்கிலிமன்னன் கிறீஸ்தவமதத்திற்கு மாறியவர்களையெல்லாம் வெட்டிக் கொன்றான். இப்படி கிறிஸ்தவர்களை வெட்டிக்கொன்றதினால் கோபமடைந்த போத்துக்கேயர் சிங்களவரின் உதவியுடன் சங்கிலி மன்னனுக்கெதிராகப் போர்தொடுத்தது. இப்போர் 1560 ஆண்டில் நடந்தது.
பலமும், அனுபவமும் கொண்ட போத்துக்கேயர், நல்லூரைக்கைப்பற்றினர். அவ்வேளையில் சங்கிலியன் வன்னிப்பகுதிக்குத் தப்பி யோடினான். பின்னர் அவனைப் பிடிப்பதற்கு பல முயற்சிகள் செய்தும் முடியாது போகுங்காலத்தில், தான் போத்துக்கேசிய ஆளுனருக்கு வரி செலுத்துவதாகச் சொல்லித் தகவல் அனுப்பினான். அதனை ஏற்றுக் கொண்டார் ஆளுனர்.
இச்சமயத்தில் மீண்டும் தனது தேசத்திற்குத்திரும்பிய மன்னளன் வரி கொடுக்காமல் அவர்களைத் துரத்திவிடுவதிலே கருத்தாய் இருந்து தக்கசந்தர்ப்பத்தில் மக்கள் புரட்சியைத் தொடக்கி அதன்மூலம் போதுதுக் கேயர் இருந்த இடத்தையெல்லாம் முற்றுகையிட்டும் கொலைசெய்தும் பழிவாங்கினான். போத்துக்கேயரின் தகவலின் படி சங்கிலியன் மக்களால் விலக்கப்பட்டவன் என்று இருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகத் தெரியவில்லை. (இவ்வாறான தகவல்கள் தற்போதுந்தானே இடம்பெறுகிறது.)
இப்படி அந்த நாவலில் பல்வேறு தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இறுதியாக ஒரு வார்த்தை செல்ல விரும்புகின்றேன் அதாவது,
தமிழர்களின் விடிவிற்கு, வீதி ஆர்ப்பாட்டத்திலும், ஆயுதப்போராட்டத்திலும் பார்க்க, விவேகமே தற்போது தேவையானது.
இக்கருத்துக்கள் மிகச்சிறிதே, இதுபோன்ற பல்வேறு முற்போக்குக்கருத்துக்கள் பலரிடத்தில் ஸ்தம்பித்து நிற்கின்றன… –