இலங்கையின் ஈழப்போரில் அதிகளவான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு திராவிட முன்னேற்றக்கழகமும் காங்கிரஸ் கட்சியுமே முழுப்பொறுப்பை ஏற்கவேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காங்கிரஸ் – திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியே முக்கிய பங்கை வகித்தது என்பது பலருக்கு தெரியாது.
காங்கிரஸ் அரசாங்கம் ஈழப்போரின் போது வழங்கிய உதவிகள் குறித்து அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட ரகசியங்களுக்கு பின்னரே இது தெரியவந்துள்ளதாகவும் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் போரை நிறுத்துமாறு கோரி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தி 3 மணித்தியாலங்களுக்குள் இந்த படுகொலைகள் நிகழ்ந்ததாக பழனிச்சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.