இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் பலமாக இருக்கின்றன. இருந்தாலும் அமெரிக்கா செய்கின்ற பணியில் நாங்கள் ஒரு இடைத்தரகர்.
அமெரிக்காவின் முதல்விருப்பு உள்ளக விசாரணையாக இருந்தது.
எனினும் அமெரிக்காவுடன் இணைந்த இதர மூன்று நாடுகளின் விருப்பின் பேரிலான தவிர்க்க முடியாத மாற்றமாக, உள்ளக விசாரணையென்ற நிலையிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா இந்த “நடுநிலையாளர்” கதாபாத்திரத்தை எடுத்தமைக்கும், விடுதலைப்புலிகளின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் இறுதிப் போரில் அழிக்கப்பட்டதற்குமான தொடர்புகள் என்ன என்பதை லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தனது கருத்தினைப் பகிர்ந்து கொண்டார்.