தமிழர் ஒருவர் தொடர்பில் கனடா ரீதியான பிடியாணை உத்தரவை Toronto பொலிஸார் பிறப்பித்துள்ளனர். 36 வயதான லிங்கதாசன் சுந்தரமூர்த்தி என்பவருக்கே இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறபித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபர் தொடர்பிலா அடையாளங்களை Toronto பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதன்படி 5 அடி 10 அங்குலம் உயரம், கறுப்பு நிற தலைமயிர், இடைநிலையான உடல்பருமனை சந்தேகநபர் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லிங்கதாசன் சுந்தரமூர்த்தி தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து 911 அல்லது 416-808-4200 அல்லது 416-TIPS(8477), அல்லது www.222tips.com இணையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த நபருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.