நந்திக் கடலோரத்தில் “தேசியத் தலைமை” யையும் புலிகளையும் அழித்தொழித்த பொன்சேகா, “இப்போது தியாகி” இவரோடு கைகோர்க்கும் கூட்டமைப்பின் “கோமாளிகள்”………?
ராஜபக்ஷவை எதிர்த்தாலும், எதிர்க்காவிட்டாலும் மே 18 என்பது பொன்சேகாவுக்கு வெற்றிநாள். தமிழர்களுக்கு அதுவே இனப்படுகொலை நாள். மூன்று வருடங்களுக்கு முன்பு முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலின் இறுதி யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதன் இறுதியிலேயே நந்திக் கடலோரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவரையும் அழித்தொழித்தது பொன்சேகராவின் கரங்கள். இந்தப் புரிதல் இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் இரத்தக்கறை படிந்த பொன்சேகாராவின் கரங்களைப் பற்றிக் கொண்டு நீதியைத் தேடிச் செல்வது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
- தளபதி சரத் பொன் சேகா அமெரிக்க விசுவாசி மட்டுமன்றி அதன் நம்பிக்கைக் குரிய இலங்கையின் உயர் மட்டத்தைச் சேர்ந்த பிரமுகருமாவார். அவரது சிறையும் பட்டம் பதவி பிடுங்கல்களும் நியாயத்தின் அடிப்படையில் அல்லவென்பது பகிரங்கமான தொன்றாகும். அவரது இராணுவச் செல்வாக்கும் ஜனாதிபதி வேட்பாளராக முன் நின்றதும் அவருக்கான அமெரிக்காவின் பின் புலமும் என்றதன் அடிப்படையிலேயே அவரை மகிந்த சிந்தனை அரசாங்கம் சிறைக்குள் தள்ளியது. யுத்த வெற்றியில் இராணுவத் தளபதியாக நின்றதன் மூலம் அதில் பங்கு கேட்க முன் வந்ததிலேயே அவருக்கான அபாயக் காலம் ஏற்பட்டது. இது பதவியில் இருந்த ஜனாதிபதிக்கும் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் தளபதிக்குமான பிரச்சினையாகவே காணப்பட்டது. இதனால் ஆளும் வர்க்கத்தின் பேரினவாதப் போக்கில் எவ்வித மாற்றமும் வந்து விடமாட்டாது.தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடியினர் அல்ல என்பது சரத் பொன்சேகாவின் பகிரங்க நிலைப்பாடு. இதன் அடிப்படையிலேயே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அதேபோன்று பகிரங்கமாகக் கூறாது விடினும் மகிந்தாவின் உள்ளார்ந்த நிலைப்பாடும் அதே தான். ஒரே நாடு ஒரே மக்கள் என்பதனுள் பொதிந்துள்ள சாராம்சமும் அதுவே தான். அதே போன்று ரணில் விக்கிரம சிங்கவிடமும் ஐக்கிய தேசியக் கட்சியிடமும் ஊறி நிற்பதும் இது எங்கள் நாடு என்ற அடிப்படை தான்.எனவே தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்ற போர்வையைப் போர்த்திய எவரும் மேலே குறிப்பிட்ட எவருடனும் கை கோர்த்துச் செல்ல முடியாது. சரத் பொன் சேகாவுடனும் ரணில் விக்கிரம சிங்கவுடனும் சம்பந்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் மாவை சேனாதிராசாவும் கைகோர்த்து மகிழ்ச்சிகரமாகச் செல்வது சரி என்றால் டக்ளஸ் தேவானந்தா மகிந்த ராஜ பக்ஷவுடன் கைகோர்த்து மக்களின் அபிவிருத்திக்காக என்று நிற்பதில் என்ன தவறு என்றே பார்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசியத்தின் குட்டையில் ஊறியவர்கள் தான். அப்படி இருந்தும் ஒரே விடயத்தை நீ செய்தால் பிழை அல்லது துரோகி. அதே விடயத்தை நான் செய்தால் சரி அத்துடன் தியாகி. இது தான் கடந்த அறுபத்தைந்து வருடகால தமிழ்த் தேசிய வாத அரசியலாக இருந்து வந்திருக்கிறது. இதுவே தமிழ் மக்கள் மத்தியிலான ஆதிக்க சிந்தனையாகவும் அதன் வழிவந்த அரசியலாகவும் இருந்து வந்துள்ளது. இத்தனைக்குப் பின்பும் அதன் நீட்சியே நிலைத்துக் காணப்படுகிறது என்றால் தமிழ் மக்கள் மத்தியில் மாற்றமும் ஏற்படாது. மீட்சியும் வர மாட்டாது என்று கூறுவதில் எவ்விதத் தவறையும் காண முடியாது. தான் ஒடுக்கப்படுவதன் வேர்களைக் கண்டு கொள்ளாத அல்லது அதற்கான மாற்று முயற்சிகளில் ஈடுபடாத எந்தவொரு மக்கள் சமூகமும் ஒடுக்கப்படுவதற்கு மட்டுமே தகுதியானதாகும். இது இன்றைய சூழலில் ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களுக்கும் பொருந்தக் கூடிய கூற்றேயாகும்.எனவே,
ராஜபக்ஷவுக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒருவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஆகிவிட முடியுமா ?
முடியாதல்லவா?
ஆனால் சரத் பொன்சேகா விடயத்தில் மட்டும் இப்படி யாரும் யோசிக்க வில்லை. இப்போது ராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையேயான மோதல் நாடகத்துக்கு ஒரு வழியாக சுபம் போடப்பட்டிருக்கும் வேளையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவராகி விட்டார் அவர். அதாவது யுத்தத்தை இறுதிவரை முன்னின்று நடத்தி எல்லா வகையான மனித உரிமை மீறல்களையும் செய்த பொன்சேகா , இப்போது தியாகி அளவுக்குச் சித்திரிக்கப் படுகிறார். தமிழர் பகுதியைச் சுடுகாடாக மாற்றிய பெருமைக்குரிய இவரைத்தான் அதிபர் தேர்தலில் சில தமிழ் அமைப்புகள் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். கடைசி நாள்வரை யுத்தகளத்தில் தமிழர்களை வதை செய்து விட்டு திடீரென ராஜபக்ஷவுக்கு எதிராகத் திரும்பி, கொலைகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காட்டிக் கொள்ள முற்பட்டவர் பொன்சேகா. கோதபாயவும் பிறரும் உத்தரவிட்டதால் தான் சரணடைய வந்தவர்களை இராணுவத்தினர் கொன்றார்கள் என்று கூறி தப்பிக்க முயன்றார். இதையெல்லாம் தமிழர்கள் நம்பினார்களோ தெரியாது. ஆனால் அரசியல் கட்சிகள் நம்பின.
ராஜபக்ஷவை பொன்சேகா ஏன் எதிர்த்தார்?
ராஜபக்ஷ சகோதரர்கள் மீது பொன்சேகாவுக்கு என்ன காழ்ப்பு?
பொன்சேகா அதிபராகியிருந்தால் தமிழர்களுக்கு என்ன செய்திருக்க முடியும்?
பொன்சேகா சிறையில் இருந்த போது கருணை வேண்டுமா என ராஜபக்ஷ அடிக்கடி கேட்டுக் கொண்டது ஏன்?
இதில் எந்தக் கேள்விக்கும் உறுதியான பதில் தெரியாமல் ஒருவித உத்தேசக் கணிப்பில்தான் பொன்சேகாவுக்கு தமிழ் இயக்கங்கள் ஆதரவளித்தன.
தங்களது கோபத்தால் பொன்சேகாவை பொசுக்க வேண்டியவர்கள் கூட அவர் அதிபரானால் தமிழினத்துக்கு மறுவாழ்வு கிடைத்து விடும் என்று நம்பும் அற்ப நிலை ஏற்பட்டது. அரசியல் தந்திரோபாயம் மக்களைப் பாதுகாக்கும் அக்கறையில் எடுக்கப்படும் நடவடிக்கை என்றெல்லாம் நியாயப்படுத்தினாலும் கூட பொன்சேகாவை ஆதரித்தது அருவருக்கத்தக்க நிலை என்பது எல்லாத் தமிழர்களின் மனச்சாட்சிக்கும் தெரியும்.
நாட்டைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தார் என்று யார் மீது குற்றம் சாட்டினார்களோ அதே பொன்சேகாவை விடுவிப்பதற்கு ராஜபக்ஷ குடும்பம் ஓடோடி வருகிறது. முன்னர் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டது போல பொன்சேகாவோ அவரது குடும்பத்தினரோ கருணை கோராத போது வலியவந்து விடுவிப்பதற்குப் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தமோ, வேறு எதுவோ இருந்து விட்டுப் போகட்டும், ஆனால், பொன்சேகாவுக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையே எப்போதும் ஒரு பிணைப்பு இருந்து வருகின்றது என்பது மட்டும் உண்மை.
யுத்தத்தில் உறவுகளை இழந்தவர்களால் பலவிடயங்களில் உறுதியான முடிவெடுக்க முடியவில்லை. ராஜபக்ஷ அசையும் தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் எப்படி அணுகுவது என்பதில் கூட ஒருமித்த கருத்து இல்லை. அவ்வளவு ஏன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லை இலங்கை அரசு கூறுவது போல் நந்திக்கடல் பகுதியில் கிடைத்தது அவரது உடல்தானா என்கிற குழப்பத்துக்கே இன்னமும் விடை கிடைக்கவில்லை. இறந்து விட்டார் என்று அஞ்சலி செலுத்தவும் முடியாமல். உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக்கை வைக்கவும் முடியாமல் தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பக்கம் போர்க்குற்றங்களுக்காக ராஜபக்ஷவையும் அவரது சகோதரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர் அமைப்புகள் போராடி வருகின்றன. இன்னொரு பக்கம் இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியா சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்படுகின்றன. வீட்டுச் சாவிகளை மகிழ்ச்சியுடன் பெறும் தமிழ்ப் பெண்களின் படங்கள் ஊடகங்களில் பிரசுரமாகின்றன. “ மேற் கூரை இன்னும் உயரமாக இருக்க வேண்டும், புகை போக்கி பெரிதாக அமைக்க வேண்டும்” என்றும் அவர்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகின்றன. இதையெல்லாம் பார்த்தால் நிவாரணப் பணிகள் முக்கியமா, நீதி பெறுவது முக்கியமா என்று குழப்பம் எழுந்து விடுகிறது.சுஷ்மா ஸ்வராஜ் களுத்துறைக்குப் போய் இந்தியாவின் தொழில் நுட்பக் கட்டமைப்பில் உருவான ரயில் சேவையை தொடக்கி வைக்கிறார், கூடவே “இங்கு யாரும் தனி ஈழம் கேட்கவில்லை” என்றும் கூறுகிறார். உடன் சென்ற தமிழ்த் தலைவர்களும் “ஆமாம்” என்கின்றனர். சிலநாட்கள் வரை சுஷ்மாவின் நிலைப்பாட்டைத் திட்டித் தீர்த்த ஊடகங்கள், பிறகு “ அளுத்கம களுத்துறை இடையே ரயில் பாலங்கள் புனரமைக்கப்படுவதால் சில நாட்கள் ரயில்கள் இயங்காது” என்று சேவைச் செய்தி வாசிக்கக் கிளம்பி விடுகின்றன.
“இலங்கையில் உள்ள தமிழர்களே ஈழம் கேட்காத போது” என்கிற வாதம் தமிழர்கள் மத்தியில் நுழைந்து விடுகின்றது. இப்போதைக்கு தனி ஈழம் தேவையா என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது.
ஏற்கனவே இருக்கும் தடுமாற்றங்ளுக்கு மத்தியில் யுத்தத்தில் கொன்றது போக எஞ்சியிருந்த தமிழர்களின் வாக்குகளைப் பெற்ற பொன்சேகா இப்போது விடுதலையாகிறார். இவர் ரணிலுடன் சேர்ந்து புதிய அரசியல் அவதாரம் எடுக்கலாம். அல்லது ராஜபக்ஷடன் போய் ஒட்டிக் கொள்ளலாம். ஒரு வேளை ராஜபக்ஷவின் மோசடிகளை அம்பலப்படுத்துவேன் என்று கூட சூளுரைக்கலாம். என்னவாக உருவெடுத்தாலும், தமிழர்களைக் கொன்றொழித்த அவரே, ஐ.நா. விலும் சர்வதேச நீதிமன்றத்திலும் ராஜபக்ஷவுக்கு எதிராக நின்று நீதியைப் பெற்றுத் தருவார் என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது.
ராஜபக்ஷவை எதிர்த்தாலும், எதிர்க்காவிட்டாலும் மே 18 என்பது பொன்சேகாவுக்கு வெற்றிநாள். தமிழர்களுக்கு அதுவே இனப்படுகொலை நாள். இந்தப் புரிதல் இல்லாமல் தமிழர்களின் இரத்தக்கறை படிந்த அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு நீதியைத் தேடிச் செல்வது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
மே 19. இந்நாள் தெற்கின் பேரினவாதத் தலைவர்களுக்கும் அவர்களது அரசாங்கத்திற்கும் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் இராணுவத்திற்கும் வெற்றித் திருநாள். மூன்று வருடங்களுக்கு முன்பு முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலின் இறுதி யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதன் இறுதியிலேயே நந்திக் கடலோரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவரையும் அழித்தொழித்தது இலங்கை இராணுவம். முப்பது வருட பேரினவாத ஒடுக்குமுறை யுத்தத்தில் இராணுவத் தீர்வை வேண்டி நின்றவர்கள் குதூகலம் கொண்டனர். இந்த இராணுவ வெற்றியை 2009 மே 19 ஆம் திகதி அன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெற்றிப் பிரகடனமாக வெளியிட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துக் கொண்டார். இந்த வெற்றியானது இலங்கைக்குக் கிடைத்துள்ள இரண்டாவது சுதந்திரம் எனக் கூறி வருடா வருடம் இந் நாள் இராணுவ வெற்றி நாளாகக் கொண்டாடப்படும் எனவும் ஜனாதிபதி ராஜபக்ஷ அறிவித்துக் கொண்டார். அதன் வழியிலேயே இன்று காலி முகத்திடலில் முப்படை அணி வகுப்புகளுடன் கூடிய இராணுவக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.
இவ்வாறு தெற்கிலே இராணுவக் கொண்டாட்டம் இடம்பெற்று வரும் அதேவேளை அன்றைய இறுதி யுத்தத்தில் இழப்புகளையும் அவலங்களையும் சுமந்து நின்ற தமிழ் மக்கள் இன்றும் தம்மீது சுமத்தப்பட்ட பாரச்சுமைகளை இறக்க முடியாது சிலுவை சுமந்த மக்களாகவே இருந்து வருகின்றனர். அன்று முட்கம்பி முகாம்களில் அடைக்கப்பட்ட சுமார் மூன்று இலட்சம் மக்கள் பட்ட துயரங்களும் அவலங்களும் வரலாற்றில் மறக்கப்பட முடியாதவைகளாகும். தமது உறவுகளை இறுதி யுத்தத்தில் கண்முன்னே ஷெல் வீச்சுகளுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும் விமானக் குண்டுகளுக்கும் காவு கொடுத்து விட்டு அழுவதற்கே கண்ணீர் அற்ற நிலையிலேயே முட் கம்பி வேலிகளுக்குள் வெந்து வெதும்பி இருந்தனர். உறவுகளை இழந்து அவலங்களைச் சுமந்து உடுத்த உடுப்புகளுடன் உணவிற்காக ஏங்கி முட் கம்பி முகாம்களில் மக்கள் பட்ட வேதனைகளும் துயரங்களும் அளவிட முடியாதவைகளாகவே இருந்தன. இம் மக்களில் பெரும் பகுதியினர் தமது சொந்த இடங்களில் குடியமரச் சென்று விட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால் அவர்கள் இன்று அனுபவித்து வரும் அன்றாட நெருக்கடிகளும் பிரச்சினைகளும் சாதாரணமானவைகள் அல்ல. இருப்பிடங்கள் அழிக்கப்பட்டு தொழில்கள் இழந்து விவசாயத்தை மீட்க முடியாது வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களையே இன்று வடக்குக் கிழக்கில் காண முடிகிறது.
இவற்றுக்கும் மேலாக இராணுவத்தின் இருப்பும் கண்காணிப்பும் வெளியாரின் அத்துமீறல் குடியமர்த்தல்களுக்கும் மக்கள் முகம் கொடுத்த வண்ணம் உள்ளனர். எங்கும் எதிலும் பேரினவாத நடவடிக்கைகள் இராணுவ ஆதரவுடனும் வழிப்படுத்தலுடனும் இடம்பெற்று வருகின்றன. கிழக்கு மாகாணம் போன்று வடக்கையும் மூவின மக்கள் வாழும் மாகாணமாக மாற்றுவது என்ற மகிந்த சிந்தனையின் பேரினவாதப் போக்கே வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனையே அங்குள்ள இராணுவ நிர்வாகம் என்பது முன்னெடுத்து வருகிறது. இவை போன்றவை தான் யுத்தம் முடிவடைந்து புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளிலும் வடக்கு,கிழக்கில் இடம்பெற்று வருபவையாகும். இவற்றுக்கு அரசாங்கம் கொடுத்த மகுடவாசகமே வடக்கின் வசந்தமும் கிழக்கின் உதயமும் என்பதாகும். இவை பேரினவாத நிகழ்ச்சி நிரலின் அழகுபடுத்தப்பட்ட முகங்களே அன்றி வடக்கு ,கிழக்கு மக்களின் உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் உரியன அல்ல.
இவ்வாறு இறுதி யுத்தத்தின் போதும் அதன் பின்னரான மூன்று ஆண்டுகளிலும் வெறி கொண்டு தறிகெட்டு ஓடும் குதிரை போன்று மகிந்த சிந்தனை அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது. இந் நிலையிலேயே ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கும் அதன் தலைவரான ஜனாதிபதிக்கும் ஒரு கடிவாளமாகிக் கொண்டது. எவ்வளவிற்கு விமல் வீர வன்சவும் , சம்பிக்கரணவக்கவும் , ரத்தினதேரரும் , அமரதாசாவும் அந்நியத் தலையீடு, வெள்ளைத் தோல் ஆதிக்கம். இறைமையைப் பாதுகாப்போம் என வெறும் வாய் முழக்கம் இட்ட போதும் அமெரிக்கா இட்ட கடிவாளத்தைக் கழற்றி விட முடியவில்லை. விரும்பியோ விரும்பாமலோ அதனை மாட்ட வேண்டிய நிலைக்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் வந்து கொள்ள வேண்டியதாயிற்று.
இவ் ஜெனீவாக் கடிவாளம் வெறுமனே குதிரையின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்லாது அதனை தமது காலடிக்கு இழுத்துச் சென்று தமக்குரியவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கே என்பதனைப் புரிந்து கொள்வது அவசியமாகும். இதனைத் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் உச்சி முதல் உள்ளங்கால் வரை அறிந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள். ஆதலால் தமிழ் மக்களுக்கு ஆதரவாக எந்தளவு தூரத்திற்கு அமெரிக்காவால் பயணிக்க முடியும் என்பதையும் காண மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
அமெரிக்காவின் ஜெனீவாத் தீர்மானம் என்ற மருந்து இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு வேலை செய்ய ஆரம்பித்துள்ளது என்பதை அதன் அண்மைய நாட்களிலான நகர்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. கடந்த வாரக் கடைசியில் அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த பிரதம அரசியல் அதிகாரியான போல் காட்டர் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கு ஜனநாயகத்திற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் அமெரிக்கப் பிரதிநிதியும் உரையாற்றியிருந்தார். அவ் அமெரிக்கத் தூதரக அரசியல் பிரதிநிதி தனது உரையில், அரசாங்கம் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு இதுவரை எவ்வித முன் முயற்சிகளிலும் ஈடுபடவில்லை என்றும் பொருளாதார அபிவிருத்தி என்பதற்கு அரசியல் தீர்வின் முக்கியத்துவம் பங்களிக்க முடியும் என்றவாறு கருத்துரைத்தார். இதே கருத்தரங்கில் பேசிய சுமந்திரன், பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் நிபந்தனையுடன் பங்கு கொள்ளத் தயாராக இருப்பதாகவும் எடுத்துக்கூறினார். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழு நம்பிக்கையும் அமெரிக்காவினதும் மேற்குலகினதும் மற்றும் ஜெனீவாத் தீர்மானத்திலுமே தங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதன் அடிப்படையிலேயே அமெரிக்க மேற்குலக விசுவாசிகளான ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைகோர்த்து நிற்கிறது. அவர்களுக்கிடையில் உருவாகி உள்ள சிங்கக் கொடி உறவைக் கண்டு மகிந்த ராஜபக்ஷவே மெய் சிலிர்த்துக் கொண்டார் போலும். அதனாலேயே அண்மையில் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் தூதுக் குழுவுடன் ஒரு கலந்து பேசும் சந்திப்பை ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்தார். இதன் மூலம் அமெரிக்க மேற்குலகிற்குத் தாம் கீழிறங்கி வருவதான தோற்றத்தைக் காட்டியுள்ளதுடன், கூட்டமைப்பை தெரிவுக் குழுவிற்கு இட்டுச் செல்வதற்கும் வழியை வெட்டியுள்ளார் என்றே கூற வேண்டும்.
அமெரிக்காவின் ஜெனீவாத் தீர்மானம் என்ற மருந்தின் காரணமாகவே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவில் இருக்கிறார். அவரது பயணம் முற் கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருப்பினும் ஹிலாரி கிளிங்டனுடனான சந்திப்பில் மேலும் பல படிகள் இறங்கும் வகையில் மகிந்த அரசாங்கத்தின் தற்போதைய போக்கின் மாற்றத்தை வெளிக்காட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனது இறுக்கும் ராஜதந்திரத்தைத் தொடர்கிறது. இதற்கு முன்னால் கொழும்பின் ராஜதந்திரம் அடி பணிய வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளது. அதன் வெளிப்பாட்டை முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட உள்ளார் என்ற அறிவிப்பை ஜனாதிபதி திடீரென அறிவிக்கும் அளவுக்குச் சென்றதன் மூலம் காணக் கிடக்கிறது.
தளபதி சரத் பொன் சேகா அமெரிக்க விசுவாசி மட்டுமன்றி அதன் நம்பிக்கைக் குரிய இலங்கையின் உயர் மட்டத்தைச் சேர்ந்த பிரமுகருமாவார். அவரது சிறையும் பட்டம் பதவி பிடுங்கல்களும் நியாயத்தின் அடிப்படையில் அல்லவென்பது பகிரங்கமான தொன்றாகும். அவரது இராணுவச் செல்வாக்கும் ஜனாதிபதி வேட்பாளராக முன் நின்றதும் அவருக்கான அமெரிக்காவின் பின் புலமும் என்றதன் அடிப்படையிலேயே அவரை மகிந்த சிந்தனை அரசாங்கம் சிறைக்குள் தள்ளியது. யுத்த வெற்றியில் இராணுவத் தளபதியாக நின்றதன் மூலம் அதில் பங்கு கேட்க முன் வந்ததிலேயே அவருக்கான அபாயக் காலம் ஏற்பட்டது. இது பதவியில் இருந்த ஜனாதிபதிக்கும் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் தளபதிக்குமான பிரச்சினையாகவே காணப்பட்டது. இதனால் ஆளும் வர்க்கத்தின் பேரினவாதப் போக்கில் எவ்வித மாற்றமும் வந்து விடமாட்டாது.
தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடியினர் அல்ல என்பது சரத் பொன்சேகாவின் பகிரங்க நிலைப்பாடு. இதன் அடிப்படையிலேயே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அதே போன்று பகிரங்கமாகக் கூறாது விடினும் ஜனாதிபதியின் உள்ளார்ந்த நிலைப்பாடும் அதே தான். ஒரே நாடு ஒரே மக்கள் என்பதனுள் பொதிந்துள்ள சாராம்சமும் அதுவே தான். அதே போன்று ரணில் விக்கிரம சிங்கவிடமும் ஐக்கிய தேசியக் கட்சியிடமும் ஊறி நிற்பதும் இது எங்கள் நாடு என்ற அடிப்படை தான். எனவே தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்ற போர்வையைப் போர்த்திய எவரும் மேலே குறிப்பிட்ட எவருடனும் கை கோர்த்துச் செல்ல முடியாது. சரத் பொன் சேகாவுடனும் ரணில் விக்கிரம சிங்கவுடனும் சம்பந்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் மாவை சேனாதிராசாவும் கைகோர்த்து மகிழ்ச்சிகரமாகச் செல்வது சரி என்றால் டக்ளஸ் தேவானந்தா மகிந்த ராஜ பக்ஷவுடன் கைகோர்த்து மக்களின் அபிவிருத்திக்காக என்று நிற்பதில் என்ன தவறு என்றே பார்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசியத்தின் குட்டையில் ஊறியவர்கள் தான். அப்படி இருந்தும் ஒரே விடயத்தை நீ செய்தால் பிழை அல்லது துரோகி. அதே விடயத்தை நான் செய்தால் சரி அத்துடன் தியாகி. இது தான் கடந்த அறுபத்தைந்து வருடகால தமிழ்த் தேசிய வாத அரசியலாக இருந்து வந்திருக்கிறது. இதுவே தமிழ் மக்கள் மத்தியிலான ஆதிக்க சிந்தனையாகவும் அதன் வழிவந்த அரசியலாகவும் இருந்து வந்துள்ளது. இத்தனைக்குப் பின்பும் அதன் நீட்சியே நிலைத்துக் காணப்படுகிறது என்றால் தமிழ் மக்கள் மத்தியில் மாற்றமும் ஏற்படாது. மீட்சியும் வர மாட்டாது என்று கூறுவதில் எவ்விதத் தவறையும் காண முடியாது. தான் ஒடுக்கப்படுவதன் வேர்களைக் கண்டு கொள்ளாத அல்லது அதற்கான மாற்று முயற்சிகளில் ஈடுபடாத எந்தவொரு மக்கள் சமூகமும் ஒடுக்கப்படுவதற்கு மட்டுமே தகுதியானதாகும். இது இன்றைய சூழலில் ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களுக்கும் பொருந்தக் கூடிய கூற்றேயாகும்.
இவை ஒரு புறம் இருக்க இவ்வாரத்தில் இடம்பெற்று வரும் நிகழ்வுகள் இலங்கையில் அரசியல் காலத்தில் சிற் சில நகர்வுகளுக்கான முன்னறிவித்தல்களை வெளிப்படுத்துகின்றன. ஏற்கனவே சுட்டிக் காட்டியது போன்று ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி சந்திப்பு , பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயத்தமாதல், முன்னாள் தளபதி சரத் பொன் சேகாவின் விடுதலைக்கான ஜனாதிபதியின் கூற்று. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் அமெரிக்கப் பயணமும் ஹிலாரி கிளிங்டனுடனான பேச்சுவார்த்தை, இன்று காலி முகத்திடலில் இடம்பெறும் மே 19 இன் இராணுவ வெற்றி விழாவின் மூன்றாவது ஆண்டு நினைவாக ஜனாதிபதி ஆற்றப் போகும் உரை என்பன உற்று அவதானிக்கப்பட வேண்டியவைகளாகும். எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் அதற்கு வழிகாட்டியாகக் கொள்ளப்படும் மகிந்த சிந்தனையும் மிகவும் நெருக்கடியான ஒரு கட்டத்தை அடைந்து நிற்கின்றன என்பது நிதர்சனமாகக் காணமுடிகிறது. நாட்டின் பொருளாதாரம் வேகமாக மோசமடைந்து வருகின்றது. தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு இழுத்தடிக்கப்பட்டு மறுக்கப்படும் நிலை தொடரப்படுகிறது. தத்தமது ஆதிக்கங்களுக்காக வல்லாதிக்க நாடுகள் தலையீடுகளுக்கு முயன்று வருகின்றன. மேற்கூறிய மூன்று முக்கிய முனைகளில் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் அழுத்தங்களையும் அரசாங்கம் எதிர்நோக்கி நிற்கின்றது. நாடும் மக்களும் எதிர்நோக்கி நிற்கும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மக்கள் சார்பான தீர்வுகளுக்கு அரசாங்கத்தால் செல்ல முடியாதுள்ளது. காரணம் இன்றைய உலகப் பொருளாதார ஒழுங்கு எனக் கூறப்படும் தாராளமயம், தனியார் மயம், உலக மயமாதல் என்பனவற்றை நடைமுறைப்படுத்தி வரும் ஏகாதிபத்திய பொருளாதார நிகழ்ச்சி நிரல் என்ற நாசத்தோடு இணைக்கப்பட்ட பொருளாதாரமாகவே இருந்து வருகிறது. இந்த வட்டத்திற்குள் நின்றவாறே பொருளாதார மூளைகளும் நிபுணர்களும் ஆலோசகர்களும் அரசாங்கத்தை ஆற்றுப்படுத்தி வருகிறார்கள்.இவர்களது அதி உன்னத சேவை என்னவென்றால் ஏகப் பெரும்பான்மையான மக்களின் தலைகளில் விலை உயர்வுகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புகள், சம்பள உயர்வு மறுப்புகள் போன்ற சுமைகளை ஏற்றுவதற்கு ஆலோசனை வழங்குவதேயாகும்.
அவ்வாறே தேசிய இனப் பிரச்சினையின் தீர்வை மறுப்பதற்கு பௌத்த சிங்கள பேரினவாதிகளும் பௌத்த மத அடிப்படைவாதிகளும் தமது ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இந்த நாடு பல்லினங்களையும் பலமதங்களையும் பல்லினப் பண்பாடுகளையும் கொண்ட நாடு என்பது மறுக்கப்படுவதிலேயே பேரினவாதிகள் முனைப்பாக இன்று அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள். இவ்விரு போக்குகளையும் நன்கு விளங்கிக் கொண்ட அந்நிய வல்லாதிக்க சக்திகள் அவற்றின் ஊடாகத் தத்தமது நலன்களுக்காகத் திட்டமிட்ட வழிகளில் செயலாற்றி வருகின்றன. இலங்கை அரசாங்கத்தையும் அதன் கீழான அனைத்து இலங்கை மக்களையும் என்றென்றும் தத்தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்து வளங்களையும் சுரண்டிச் செல்லவும் கட்டற்ற வணிகம் மூலம் செல்வங்களை வாரிச் செல்லவுமே நிற்கின்றன. இந் நிலையினை பாதுகாத்து விரிவுபடுத்தி மறுகொனியாக்கம் செய்வதன் ஊடாக நவகொலனித்துவத்தை நிலை நாட்டுவதே உலக பிராந்திய மேலாதிக்க நாடுகளின் குறிக்கோளாகும். இவற்றைப் பற்றிய தெளிந்த அரசியல் போக்கு என்பது மக்கள் மத்திக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். இருப்பதை விமர்சனம் மட்டும் செய்து அதில் சுகம் காண்பது என்பதற்கு அப்பால் மாற்று அரசியல் பற்றிய சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் வருதல் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகி வருகிறது. இதனை யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும் இன்றைய யதார்த்தம் இதுவாகவே காணப்படுகிறது.