தமிழர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; சுவாமி ஸ்ரீ ரவிசங்கர்

251

நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக வாழும் கலை நிறுவன தலைவர் சுவாமி ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

இதன்போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.

ஸ்ரீலங்காவில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவிவரும் நிலையில் இதனூடாக தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக அவர் கூறினார்.

ஈழத் தமிழர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் கலை கலாசாரத்தை அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் ஈழத் தமிழ் மக்களுக்கு சமஸ்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வார்த்தையையும் இதன்போது வெளியிட்டார்.ravesankarravesankar01ravesankar02ravesankar03ravesankar04ravesankar05ravesankar06ravesankar07

SHARE