தமிழினியின் மரணத்திற்கு அனந்தி சசிதரன் அவர்களின் இரங்கல் செய்தி

247

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மரணம் குறித்து வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுடைய அரசியல் துறையில் மிக முக்கிய பங்கு வகித்த தமிழினி அவர்களின் மரணமானது தமிழினத்திற்கு பேரிழப்பாகும். அது மட்டுமல்லாது இவரது மரணம் தொடர்பிலும் அவர் சந்தேகத்தினை வெளியிட்டுள்ளார். சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதன் காரணமாகவே இவ்வாறான நோய் இவருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இவரைப்போன்று இன்னும் பல போராளிகளுக்கு புனர்வாழ்வு என்ற போர்வையில் அவர்களை தனிப்பட்ட முறையில் சித்திரவதைக்குட்படுத்தியதுடன், பாலியல் ரீதியாகவும் அவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் எனக்கூறிய அவர் தமிழினியின் மரணம் தொடர்பாகவும் இவ்வாறான துன்புறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். தமிழினத்தின் விடிவுக்காக 1991ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்ட தமிழினி பல்வேறு சமர்க்களங்களில் தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார். அத்தோடு அரசியல் துறையிலும் தேசியத்தலைவரது நன்மதிப்பினைப் பெற்று விடுதலைப்புலிகளது அரசியற்துறையின் பொறுப்பாளராக பதவி வகித்தார். இவரது சாதனைகள் சொல்லில் அடங்காதவை. தமிழினியைப்போன்று இன்னும் பல ஆண், பெண் பேராளிகள் இன்னமும் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றார்கள். விடுதலைப்போராட்டத்pல் இருந்த போராளிகள் திடீரென மரணமடைவது சந்தேகத்தினை வலுப்படுத்துகினற்து. தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறியபின் சுகயீனம் காரணமாக இவர்கள் இறக்க நேரிடுவதற்கான காரணம் என்ன? விடுதலைப்புலிகளது அமைப்பில் இருந்தவர்களின் நிலைமைகள் இவ்வாறே காணப்படுகின்றது. இந்நிலை மாற்றியமைக்கப்படவேண்டும். கடந்த காலங்களில் பூசா, நான்காம்மாடி போன்ற இடங்களில் இதுபோன்ற சித்திரவதைகள் இடம்பெற்றன. இன்று புனர்வாழ்வு என்கின்றபெயரில் தமிழினத்தினது விடிவுக்காகப்போராடிய போராளிகளுக்கு சித்திரவதைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. விடுவிக்கப்பட்டதாகக்கூறப்படும் 11000 போராளிகளையும் தீவிர மருத்துவத்திற்கு உட்படுத்துவதன் ஊடாக அவரது உடல்நிலையில் எவ்வாறான தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்பதைக் கண்டறிவதன் மூலம் இதுபோன்ற அநியாயமான மரணங்களைத் தடுத்து நிறுத்த இயலும் எனவும் அவர் தெரிவித்தார். இன்று தமிழினியின் மரணத்தில் நாம் பங்கெடுத்துள்ளோம். அவரது ஆத்மா சாந்தியடைய நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

SHARE