ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் இதை தொடர்ந்து மலையாள படத்தில் தான் நடித்து வருகின்றார்.
இவர் எப்போதும் தமிழுக்கு வருவார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது.