தமிழில் தேசிய கீதம் பாடுவதில் பிழையில்லை – பெல்லன்வில விமலரத்ன தேரர்

274
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதில் பிழையில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பி.பி.சி சந்தேசய சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதம் என்பது ஒன்றல்லவா? அதனை மாற்றப் போவதில்லை. எனினும் தேசிய கீதத்தின் ராகத்தில் தமிழர்கள் அவர்கள் மொழியில் பாடுவதற்கு சந்தர்ப்பம் அளிப்பதில் எவ்வித தவறும் கிடையாது.

இது தொடர்பில் கடுமையாக எதிர்ப்பை வெளியிட வேண்டிய அவசியமில்லை.

நாட்டின் பிரதான மதத்தை பாதுகாக்க வேண்டுமென அரசியல் அமைப்பில் கூறப்படுவதில் தவறில்லை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் ஏனைய நாடுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

ஏனைய மதங்களையும் பாதுகாக்க வேண்டுமென அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பௌத்த மதத்தை பாதுகாப்பது குறித்த அரசியல் அமைப்பு யோசனையினால் ஏனைய மதங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

நாட்டின் பிரதான மதத்தை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கங்களுக்கு காணப்படுகின்றது.

ஏனைய நாடொன்றின் பிரஜையொருவர் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டாலும் அவருக்கு உயர் பதவிகளை வகிக்க முடியாது என்ற யோசனை அநீதியானதல்ல என பெல்லன்வில விமலரதன தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த சாசன செயலணி என்ற அமைப்பு புதிய அரசியல் சாசனம் தொடர்பில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் 15 அம்ச கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் பி.பி.சி சிங்கள சேவை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

vimalarathna-thero

SHARE