தமிழ் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீத, அகிம்சா, சத்தியாக்கிரகப் போராட்டங்கள் எல்லாம் கைவினையற்று நிற்க தமிழ் இளைஞர்கள் பல்வேறு ஆயுத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு சகோதரப்படுகொலைகளின் பின்னர் L.T.T.E இயக்கம் மாத்திரமே தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற நிலை ஏற்பட்டு ஆயுதக் குழு நிலையிலிருந்து L.T.T.E யினர் ஆயுதப் போராட்ட இயக்கமாக மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சியுடன் முன்னேற்றம் அடைந்த காலம் தொட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
ஸ்ரீலங்கா அரசிற்கு பெருத்த தலையிடி ஏற்பட்டு பல்வேறு வகையிலான பொருளாதார நெருக்கடி ஏற்படுகின்றது. எதை இழந்தாலும் L.T.T.E யினரை இல்லாதொழிக்க வேண்டும் என்கிற நிலை இலங்கை அரசின் ஆட்சிபீடத்திற்கு வந்த அனைத்து தலைவர்களுக்கும் ஏற்படுகின்றது.
ஒரு நாட்டிற்குள்ளேயே பெயர் சூட்டி இராணுவ நடவடிக்கைகளை முன்னேடுக்க வேண்டிய கட்டம் ஏற்பட்டு இலங்கை இராணுவத்தின் முக்கிய கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதியாகிய ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் காலம் தொடக்கம் மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, முழு மூச்சுடன் L.T.T.E யினருக்கு எதிராக பல படையெடுப்புக்களை மேற்கொள்கின்றனர்.
இராணுவத்திற்கு நிகராக L.T.T.E யின் இராணுவத் தளபதியாக இருந்த சதாசிவம் கிருஸ்ணகுமார் என்று அழைக்கப்பட்ட கேர்ணல் கிட்டு தம் பக்கத்து நடவடிக்கைகளில் மும்முரமாக செயற்படுகின்றார். ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் ஆட்சி விடைபெற்று ரணசிங்க பிரேமதாசா ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தடைப்பட்டுப்போக இராணுவத்தினருக்கும் டு.வு.வு.நு யினருக்கும் இடையிலான முறுகல் அதிகமாகி இராணுவ நடவடிக்கைகள் மூர்க்கடைகின்றன.
ஸ்ரீலங்கா இராணுவத்தை ஏதோ ஒரு வகையில் முடக்கினாலன்றி எதுவுமே மிஞ்சப்போவதில்லை. இருப்பிற்கே ஆபத்து வந்து விடும் என்கின்ற நிலையில் L.T.T.E க்கு, இலங்கை இராணுவத் தளபதி டென்சில் கொப்பேகடுவ அல்லது L.T.T.E இராணுவத் தளபதி கேர்ணல் கிட்டுவா என்கிற போட்டி உச்சம் பெற L.T.T.E இராணுவம் தளபதி கேர்ணல் கிட்டு பல்வேறு வியூகங்களை வைத்து யாழ்ப்பாணத்திலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ நிலையங்களில் இராணுவத்தினரை முடக்க முயற்சி எடுத்து பலாலி இராணுவத்தளம், கோட்டை இராணுவத்தளம், காங்கேசன்துறை இராணுவத்தளம் என எல்லா இடங்களிலிருந்த இராணுவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கோட்டை இராணுவத்தளம் கைப்பற்றப்படுகின்றது. நிலமை சற்று மோசமடைய இலங்கை இராணுவத் தளபதி டென்சில் கொப்பேக்கடுவவின் கட்டளையின் பேரில் ஆகாய கடல் மார்க்க நடவடிக்கைகள் அதிகரிக்கின்றன.
டு.வு.வு.நு யினரும் பல்வேறு வகைகளில் தாக்குதல்களை முன்னெடுக்கின்ற போது பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக யாழ் மாவட்டத்தில் தரித்து நின்ற மேஜர் டென்சில் கொப்பேகடுவ அனைத்து முக்கிய தளபதிகளையும் யாழிற்கு வரவழைத்து யாழ் குடாநாட்டின் மீது பாரிய நடவடிக்கை ஒன்றுக்கு திட்டமிடுகின்றார். இந்த தகவல் புலிகளுக்கு புலனாய்வுத் தகவல்கள் மூலம் கிடைக்கப் பெறுகின்றன. யாழ் கச்சேரியில் கூடிய புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இதற்கு பதிலடி கொடுக்க முக்கிய திட்டங்களை தீட்டி பண்ணைப் பாலத்திலிருந்து ஒரு பகுதியினரையும் அராலி கடல் வழியாக ஒரு பகுதியினரையும் புலனாய்வுப் பிரிவின் முக்கிய பங்கெடுப்போடு முன்னகர வைத்து இராணுவ முன்னரங்கு நோக்கி ஒரே வாகனத்தில் பயணித்த இலங்கையின் முன்னணி படை முக்கியஸ்தகர்கள் கண்ணிவெணியில் சிக்குண்டு இறக்க வேண்டி ஏற்படுகின்றது. இதில் மேஜர் ஜென்ரல் டென்சில் கொப்பேகடுவவும் கொல்லப்படுகின்றார். L.T.T.E யினருக்கும் குறிப்பிட்ட காலத்தில் கேர்ணல் கிட்டு சென்ற வாகனத்திற்கு குண்டெறியப்பட்டு கிட்டு தனது ஒரு காலை இழக்கின்ற துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகின்றது.
இங்கு முக்கியமாக கூறப்பட வேண்டிய ஒன்று இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்கள் தலைமையிலேயே நடைபெற்றது. கொப்பேகடுவவின் மறைவிற்குப் பின்னர் மேஜர் ஜெனரலட் ஜனக பெரேரா இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்க ஆரம்பிக்கின்றார். இவரது காலத்தில் இலங்கை அரச தலைவியாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் பாதுகாப்பு அமைச்சராக அரச தலைவியின் மாமனாரும் ஒய்வு பெற்ற இராணுவத்தளபதியுமான அனுருத்தரத்வத்த அவர்கள் இருக்கின்றார்கள்.
அனுருத்தரத்வத்தை அவர்கள் தனது சேவைக்காலத்தில் L.T.T.E யினருடனான பல்வேறு இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று வழி நடத்தியிருந்ததோடு ஒரு சண்டையில் தனது வரலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒய்விற்கு வந்தவராவார்.
சந்திரிக்கா அரச தலைவியாக பதவியேற்று L.T.T.E யினருடன் பல்வேறு சுற்றுப்பேச்சுவார்தைகளில் தனது தரப்பினரை ஈடுபடுத்தி இருந்தும் அவை தோல்வியில் முடிவு பெற டு.வு.வு.நு யினருடன் பாரிய மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டு யாழ் குடா நாட்டிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் யாழை விட்டு வெளிக்கிட்டு வன்னி நோக்கி செல்லவேண்டி ஏற்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு ஜனக பெரேராவே தலைமை தாங்குகின்றார்.L.T.T.Eயினரும் யாழிலிருந்து வன்னியை நோக்கி தமது தளத்தை மாற்றியதுடன் மக்களை இழப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாய நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.
இக்கால கட்டத்தில் L.T.T.E யில் முக்கிய தளபதிகளான கேர்ணல் சொர்ணம் பிரிகேடியர் பால்ராஜ் கருணா அம்மானும் முக்கிய தளபதிகளாக களத்தில் யாழில் வெளிக்கிட்ட இராணுவத்தினரால் நாவற்குழியை கடந்து பரந்தன் வரையில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாகின்றனர். இடம்பெயர்வு பல அவலங்களைத் தந்து தமிழ் மக்கள் மனதிலும் L.T.T.E யினர் மத்தியிலும் பாரிய வடுவையும் மனக்குழப்பத்தையும் ஏற்படுத்தி அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்ச நிலை வன்னியை நோக்கி மக்களில் அநேகமானோர் வன்னியில் வாழ்க்கையைத் தொடர ஆரம்பிக்கின்றனர். மீண்டும் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணம் நோக்கி செல்கின்றனர். பரந்தனில் நிலையெடுத்திருந்த இராணுவத்தினர்.
இராணுவ நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நோக்கி முன்னேறி கிளிநொச்சியில் நிலையெடுக்கின்றனர். L.T.T.E யினரின் நிர்வாக எல்லை இன்னும் ஒடுங்குகின்றது. தளபதிகளான கேர்ணல் சொர்ணம் பிரிகேடியர் பால்ராஜ் கருணா அம்மான் ஆகியோர் தமது சண்டை களங்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினரை திசை திருப்பும் நோக்கோடு வேறு இடங்களில் தாக்குதல்களை முன்னெடுத்து வெற்றியும் காண்கின்றனர்.
பூநகரியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மீது ஒட்டு மொத்த சக்தியையும் பயன்படுத்தி ‘தவளைப் பாய்ச்சல்’ நடவடிக்கையை மேற்கொண்டு பாரிய வெற்றியையும் பெறுகின்றனர். இராணுவத்தினர் பலத்த இழப்புக்களுடன் களத்திலிருந்து பின்வாங்குகின்றனர். L.T.T.E யினரால் பாரிய இராணுவ தளபாடங்களும் சொத்துக்களும் கைப்பற்றப்படுகின்றன.
சம காலத்தில் பல்வேறு இராணுவ ரீதியான வேறு மோதல்கள் நடைபெற்றாலும் யாழில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரால் யாழின் உள்ளே பல்வேறு துன்பகரமான நிகழ்வுகள் நடந்தேறிய வண்ணமே இருந்தன. ஜனக பெரேராவின் நேரடிக் கண்காணிப்பில் யாழ் மாவட்டம் இருந்த போது தான் செம்மணி படுகொலை பாடாசாலை மாணவி கிருசாந்தியினதும் உறவினர்களதும் படுகொலைகளும் நடந்தேறின.
தவளைப் பாச்சல்:-
பூநகரியில் முகாமிட்டு கிளிநொச்சி நோக்கி முன்னகர ஆயத்தமாக இருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மீது புலிகளினால் முதலாவதாக பெயர் சூட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் புலிகள் நாகதேவன் துறையை 450 புலி வீரர்களின் இழப்புடன் கைப்பற்றுக்கின்றனர். ஸ்ரீலங்கா இராணுவத்தில் 1550 வீரர்கள் பலியான தோடு பலத்த ஆயுத இழப்பையும் பொருட்தளபாட இழப்பையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதைப் புலிகள் ஊடறுப்பு ஊடாகவேசெய்ததால் மாங்குளத்திலும் கிளிநொச்சியிலும் நிலைகொண்டிருந்த இராணுவத்தினருக்கு இது பெரும் சவாலாக அமைந்திருந்தது. இந்த நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட தளபதி மணலாற்று அன்பு. புலிகளிடம் சரணடைவது போல் வந்த இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுகின்றார். கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி ஆகாய கடல்வெளிச் சமரில் பாரிய வெற்றிகள் கிடைத்தபோதும் தளபதி குணா கொல்லப்படுகின்றார். 1500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குடாவில் தரை இறக்க கப்பல் மூலம் வருகின்றனர். அச்சமயம் இராணுவத்தினரை தரையிரங்க விடாது கப்பலில் வைத்தே தாக்குதல் நடத்தி அழிப்போம் என்கின்றார் தளபதி சூசை ஆனால், தளபதி குணா இறங்கிய பிறகு தாக்குதல் நடத்துவோம் என்று கூறியதற்கு அமைவாக தாக்குதல் நடத்தப்படுகின்றது. இதில் புலிகள் தப்பில் முக்கிய தளபதி குணா, உட்பட 854 பேர் சாவடைய இராணுவத்தினரில் 1500 பேர் கொள்ளப்படுகின்றனர். ஆனையிறவு பெயர்ப் பலகை வரை புலிகள் முன்னேறுகின்றனர். ஜனக பேரேரா மீண்டும் பிரிதொறு தாக்குதலை புலிகளுக்கு எதிராக ஆரம்பிக்க புலிகள் ஒரு கிலோ மீற்றர் பரப்புக்குள் சுற்றி வலைக்கப்படுகின்றனர். தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள் பின்வாங்குகின்றனர்.
தொடரும்…….
இடிவிழுந்தான்