தமிழீழ விடுதலைப் புலிகளால்இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்தி முன்னுதாரணமான தேசத்தை நிறுவி காட்டியது

319

 

தமிழீழ காவல் துறை உதயமான நாள் இன்றாகும்…!!!

1991 நவம்பர் 19 ஆம் திகதி தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கப்பட்டது.
தமிழீழ காவல் துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால்இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்தி முன்னுதாரணமான தேசத்தை நிறுவி காட்டிய காவல்துறை ஆகும்.
இன்று மலிந்து கிடைக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போராளிகள், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் வலிகளின் கொடுமை தாளாமல் போராடி வருகிறார்கள்.
“இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?” என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை மீட்டு பார்க்கிறார்கள்.

15055874_166961657107307_5285401497738657139_n 15085590_166961847107288_1337460303305765044_n 15094504_166961703773969_1311833779157953604_n 15134653_166961747107298_4749842765495404972_n

1991, நவம்பர் 18 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் முன்னிலையில் அணிவகுத்து காட்டி தம் கடமையை கையில் எடுத்த உன்னதமான நாள் ஆகும்.
மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது.
தமிழீழ எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது இவர்கள் செயற்பட்டுள்ளனர்.

காவல் துறையின் பிரிவுகள். குற்றபிரிவு / விசேட குற்றபிரிவு /போக்குவரத்து பிரிவு /புலனாய்வுபிரிவு /தமிழீழ தேசிய தலைவரின் நேரடி விசாரைண பிரிவு /ஆளணி மற்றும் நிர்வாக பிரிவு /விசேட தாக்குதல் பிரிவு /மக்கள் பொதுநல சேவை பிரிவு போன்றன இயங்கின தமிழீழ காவல் துறை தேசிய தலைவர் பிரபாகரன் நேரடி வழிகாட்டலில் இயங்கியது இதற்கு பொறுப்பாளர்களாக பா.நடேசனும்.பின்னர் இளங்கோ என்ற ரமேசும். இயங்கினர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது ‘தமிழீழக் காவற்றுறை’ உருவாக்கம்.
தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை நிறுவி காட்டிய சிறப்பு கொண்டது.
காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்பட்டு வந்த தமிழ் மண்ணை தமிழர்கள் ஆண்ட காலங்கள் அவை.
. பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு – கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளுமே காரணம்.
அவ்வகையில் மிக முதன்மையான கட்டமைப்பாக நோக்கப்படுவது தமிழீழக் காவற்றுறையாகும்.
அக்கட்டமைப்பு நிறுவப்பட்டு 19.11.2016 இன்றோடு 15 வருடங்கள் நிறைவாகின்றன.

வன்னியில் போர் கடுமையாக நடைபெற்ற காலப்பகுதியில் மிதிவண்டிகள் மட்டுமே காவற்றுறையின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. பலபத்து மைல்கள் போய் குற்றவாளியொருவரைக் கைதுசெய்து மிதிவண்டியிலேயே அழைத்துவருவார்கள்.
தாயக எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது காவல் துறையினர் செயற்பட்டார்கள்.
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘யாழ்தேவி’ முறியடிப்புச் சமர் உட்பட பல சமர்களில் அவர்கள் துணைப்படையணியாகவும் செயற்பட்டார்கள். சிலர் களத்தில் வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.
ஊழல், இலஞ்சம் துளியளவுமற்ற கறைபடியாத துறை தமிழீழக் காவற்றுறை என்பதோடு எந்த ஒரு குறையும் எங்கள் மண்ணில் படியாமல் காவல் நின்று மாதிரி நேர்த்தியான அரசை நிறுவ துணை நின்றார்கள் .
போர்ச்சூழலில் சமூகக் கட்டமைப்புக் குலையாது பாதுகாத்த பெருமை தமிழீழக் காவற்றுறையைச் சாரும்.
பதினைந்தாண்டுகள் அரும்பங்காற்றிய தமிழீழக் காவற்றுறை 2009 முள்ளிவாய்க்காலோடு அமைதியாகி போனது. அதனால் மக்கள் இன்று அமைதி இன்றி பரிதவிக்கின்றார்கள்.

SHARE