தமிழீழ விடுதலைப் புலிகளே வடக்கில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர் – அரசாங்கம்

301

தமிழீழ விடுதலைப் புலிகளே வடக்கில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கில் பாரியளவில் சொத்துக்கள அழிக்கப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் படையினரால் வடக்கு வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினர் மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதில் கூடுதல் கரிசனை காட்டியதாகத் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் உடமைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே சேதம் விளைவித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன மற்றும் மத அடிப்படையில் நாட்டில் மக்களுக்கு வீடுகள் வழங்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் 8ம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைதிப் புரட்சி தொடர்பான கொண்டாட்டங்கள் பாரியளவில் நடைபெறாது எனவும் பதிலாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE