தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய கனேடியர்கள். நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

225

625-500-560-350-160-300-053-800-748-160-70

கனடாவை சேர்ந்த மூன்று நபர்கள் பயங்கரவாதிகள் என உறுதி செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட வழக்கில் தான் அலைக்கழிக்கப்பட்டதாக புரூக்ளின் நீதிபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மூன்று பேரின் தண்டனை காலம் 10 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெடரல் நீதிபதி Raymond Dearie கூறியதாவது, குறித்த வழக்கில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது. அதை என்னால் திருத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏவுகணைகள் பெற சதி செய்ததாக கடந்த 2011ல் கனடிய நாட்டினர் Sathajhan Sarachandran, Sahilal Sabaratnam, Thiruthanikan Thanigasalam ஆகியோருக்கு தலா 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 2012ல் தங்களின் தண்டனை குறைப்பு கோரி மூவரும் புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிபதி Raymond Dearie, மூன்று பேரின் தண்டனை காலத்தை 10 ஆண்டுகள் குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

Raymond Dearie கூறுகையில், தற்போது பயங்கரவாதம் எது என்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். இலங்கையில் நடந்த மோதலை பற்றியும் அதிகம் தெரிந்து இருப்போம்.

எந்தவித கண்டிப்பும் இன்றி அனைவருக்கும் சமமான நீதியை வழங்க வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த வழக்கு என் தலைமையில் கீழ் உள்ளது. இதை மனதில் வைத்தே பல சிக்கல்களை சந்தித்தேன் என்றார்.

மேலும், இந்த வழக்குடனான சட்ட அமலாக்க ஆதாரங்கள், தமிழ் புலிகள் ஒரு பயங்கரவாத குழு அல்லது ஆயுத ஒப்பந்தத்தில் மூவரின் பங்கு போன்றவற்றை அரசு எந்த ஒரு நிலையிலும் பிரதிபலிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீர்ப்பின் படி, மூவரும் 15 ஆண்டு தண்டனை காலத்தை அனுபவித்து கனடா திரும்புவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி Raymond Dearie உத்தரவு படி இந்த மூவரும் செயல்படுவார்கள் என்றும், அவர் அநீதியை அழித்து நீதியை மீண்டும் நிலைநாட்டியுள்ளதாகவும் அவர்களின் வழக்கறிஞர் Anthony Ricco தெரிவித்துள்ளார்.

 

SHARE