தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்துமாறு கனடா உத்தரவு?

232

தமிழீழ விடுதலைப் புலி உறப்பினரை நாடுகடத்துமாறு கனடா உத்தரவிட்டுள்ளதாக கனேடிய கனேடிய செய்திகள்  தெரிவிக்கின்றன.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாணிக்காவசம் சுரேஸ் என்ற நபரையே இவ்வாறு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கனேடிய மத்திய நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பத்துள்ளது.
1995ம் ஆண்டு முதல் கனேடிய அரசாங்கம் சுரேஸை நாடு கடத்த முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனேடிய குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் சுரேஸை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அந்நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.
குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் சுரேஸை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
1995ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுரேஸ் மேன்முறையீடுகளை செய்து நாடு கடத்தப்படுவதனை தவிர்த்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுரேஸ் உலகத் தமிழர் அமைப்பின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு வந்தார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ள நிலையில் சுரேஸ் நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE