தமிழீழ விடுதலை புலிகளுடனான 30 வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை, முறையாக ஆவணப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

185

 

தமிழீழ விடுதலை புலிகளுடனான 30 வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை, முறையாக ஆவணப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆர்வம்காட்டி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் ஓய்வு பெற்ற படைதளபதிகளை இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.(maithripala sirisena met army commanders, Tamil web news, Tamilnews, )

கடந்த திங்கட்கிழமை(06.8.18) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நடைபெற்று முடிந்த யுத்தம் தொடர்பில், இலங்கையில் பல புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றபோதிலும், அந்த புத்தகங்களில் முறையாக யுத்தம் தொடர்பில் ஆவணப்படுத்தப்படவில்லை என்பதால், அதனை அரசாங்கம் முறையாக ஆவணப்படுத்தும் முயற்சிகளில் களமிறங்கியுள்ளது.

எனினும் இந்த இரகசிய சந்திப்பில், யுத்தத்தில் இராணுவத்தினருக்கு வெற்றியை பெற்றுகொடுத்த, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முறையான வரலாறுகளை உள்ளடக்கிய யுத்த ஆவணமொன்று வெளிவரும் வரையில், இறுதி யுத்தத்தை ஆவணப்படுத்தும் திட்டம் தொடர்பில், இரகசியம் பேணப்பட வேண்டுமென, ஓய்வு பெற்ற படைதளபதிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெற்ற படைதளபதிகளை இரகசியமாக சந்தித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில், உத்தியோகப்பூர்வமான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து, இது தொடர்பான செய்திகளை ஊடகங்களினூடாகவே தானும் அறிந்து கொண்டதாகவும், எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்கள் தனக்கு தெரியாது எனவும் கூறினார்.

SHARE