தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யுங்கள் என்று மக்கள் கூறவில்லை. தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளே கூறுகின்றன – பரிசீலனை செய்தே முடிவுகள் எடுக்கப்படும்.

369

கடந்த சில வாரங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்தல் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள சுமந்திரன் அவர்கள் கனேடியன் தொலைக்காட்சிக்கு கருத்துத்தெரிவித்ததன் விளைவாக, பல்வேறு சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக திருகோணமலையில் கூட்டமொன்றை ஒழுங்குசெய்திருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, தற்பொழுது பல்வேறான தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது. அதேநேரம் கட்சி பதிவு செய்யப்படாமலேயே கட்சி பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவது உண்மையில் வருத்தமளிக்கின்ற செயலாகும்.

Sampanthan_2103231f

இருந்தாலும் இதுவரை காலமும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பாடாததன் காரணம் என்னவென்று பார்க்கின்றபொழுது ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியவற்றின் கட்சித் தலைவர்களின் கருத்தின்படி, பொதுவாகவே அவர்கள் அனைவரின் கருத்தும் ஒருமித்ததாகவே அமைகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு புதிவு செய்யப்பட்டால் தமிழரசுக்கட்சி தனது அதிகாரத்தினை பயன்படுத்த முடியாத நிலைதோன்றும்.
பதிவு செய்யப்படும் பட்சத்தில் அதற்கான சின்னம், தலைவர், செயலாளர், பொருளாளர், அதனது யாப்பு விதிமுறைகளுக்கமைய செயற்படுவதோடு, தமிழரசுக்கட்சி அல்லது ஏனைய கட்சிகள் என்றோ தன்னிச்சையாக எந்தவித முடிவுகளையும் எடுக்கமுடியாத நிலைதோன்றும். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் பலம்பொருந்திய தமிழரசுக்கட்சி காலப்போக்கில் பின்னடைவினை சந்திக்கநேரிடும். ஆயுதக்குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். அவர்கள் கொலை, கொள்ளை, கப்பம் போன்றவற்றில் கடந்த காலங்களில் செயற்பட்டதன் காரணமாக, கூட்டமைப்பாக பதிவுசெய்யப்படும் சந்தர்ப்பத்;தில் அத்தகையதொரு செயற்பாடு இல்லாமல் போவதற்கான வாய்ப்புக்கள் அமையப்பெற்று, தமிழரசுக்கட்சியினது தலையீட்டினையும் மீறி, மேற்குறிப்பிடப்பட்ட கட்சிகள் மேலோங்கிச்செல்லக்கூடியதான வாய்ப்புக்கள் இருக்கக்கூடியதனாலும், தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை பதிவுசெய்வதில் தயக்கம் காட்டிவருகின்றது.

TNA-Leaders-5-party2-436x360

அதுமட்டுமல்லாது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்தின்படி தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை தொடர்பில் பேசுவதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அருகதையற்றது. கட்சிகள் பதிவுசெய்யப்பட்டால் தமிழரசுக்கட்சி தனது செயற்பாடுகளை தன்னிச்சையாக செயற்படுத்த முடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். தேர்தல் காலங்களில் மாத்திரம் புலிச்சாயம் பூசிக்கொண்டு தேசியம் என்று பேசுவது தமிழரசுக்கட்சிக்கு கைவந்த கலையாகிவிட்டது. ஒருநாடு இரு தேசங்கள் எனக்கூறிவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, இவர்கள் குறிப்பிடுவது தமிழர் பகுதி ஒரு சேதம். சுpங்களப்பகுதி ஒருதேசம. இந்த இரண்டு தேசங்களும் இணைந்துதான் ஒரு நாடு எனக்கூறுகின்றனர் எனத்தெரிவித்துள்ளார். இந்தக் கோசங்களினால் நாம் எதனையும் சாதித்துவிடப்போவதில்லை. உண்மையை புரியவேண்டுமானால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்றன. அங்கு சமஸ்டி முறையிலான ஆட்சி நடைபெறுகின்றது.
அதுபோன்று கனடா, ஜேர்மன், சுவிஸ் போன்ற நாடுகளிலும் கூட சுயாட்சி அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையுடன் அங்கு வாழும் மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். பிரிவினை வாதத்தின் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாது. தமிழ்த்தேசிய வாதம் இல்லையென்றால் தமிழர் ஒரு சிறுபான்மை என்பதன் அடிப்படையில்தான் செயற்படமுடியும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அடிப்படை தேசிய வாதத்தினை கைவிட்டு சிறுபான்மை இனமாக செயற்பட தீர்மானித்துள்ளது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தியாவை நம்பி நாம் பலமுறை ஏமாற்றப்பட்டும், சம்பந்தன் அவர்கள் இந்தியாவே தான் தஞ்சம் என்று தனது அரசியலை காய்நகர்த்தி வருகின்றார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை பதிவு செய்வதாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், இவர்கள் ஒருபோதும் பதிவு செய்யப்போவதில்லை. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்பன ஒற்றுமையாக செயற்படும் என்பது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய விருப்பமும் ஆகும். இப்பதிவு தொடர்பாக வடக்கு அமைச்சர்கள், உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சியின் விசுவாசிகள் என்ற ரீதியிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பிளவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்றும் குற்றஞ்சுமத்தப்பட்டும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் கொதித்தெழும்பியிருக்கின்றனர். கூட்டமைப்பை பதிவு செய்வதனால் தமிழரசுக்கட்சிக்கு எந்தவித நன்மையும் இல்லை என்பதே வெளிப்படையான உண்மை. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் ஒருபோதும் இணைந்து போட்டியிடப்போவதுமில்லை. அவ்வாறு போட்டியிட்டு வெற்றிபெறுவது சந்தேகத்திற்கிடமானதன் காரணமாக, அவ்வாறானதொரு நிலைப்பாட்டினை மேற்கொள்ளமாட்டார்கள்.

gajendra-kumar

இணைந்துசென்று செயற்படுவார்களாகவிருந்தால் தேர்தலில் தோல்வியடையும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஆகவே தமிழரசுக்கட்சி இவர்களின் கருத்துக்களை வேடிக்கை பார்ப்பதுடன் ஆழ்ந்துபார்த்து அதனை சீர்செய்துகொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். தற்பொழுது தமிழரசுக்கட்சி ஒரு தெளிவான விளக்கமொன்றை ஏனைய கட்சிகளுக்கு கூறியிருக்கின்றது. வெளிப்படையாக கூறப்பட்ட விடயம், கட்சிகளை பதிவு செய்வது தொடர்பில் எதிர்வரும் 07ம் திகதி முதலாவது கட்டமாக கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். அக்கட்சிக்குள் பேசப்பட்ட விடயங்கள் என்னவென்றால், தமிழரசுக்கடசியின் அங்கத்தவர்கள் ஏகோபித்து பதிவுசெய்வதா இல்லையா என்கின்ற தீர்வினை பெறவேண்டும்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக பதிவுசெய்து விட்டுவாருங்கள். நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கின்றோம் என மக்கள் கூறவில்லை. ஆகவே இவற்றையெல்லாம் மூத்த மற்றும் சிரேஸ்ட தமிழரசுக்கட்சியின் தலைவர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே முடிவுகள் எட்டப்படும் என்ற நிலையில்தான் தமிழரசுக்கட்சி இருக்கின்றது. இதற்கிடையில் கட்சி பதிவுசெய்யப்படவேண்டும் என்ற நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கனடாவில் இத்தகைய தொலைக்காட்சிக்கு, கட்சி பதிவுசெய்யப்பட்டுவிட்டது என்ற செவ்வியினை வழங்கியிருக்கலாம் என்றும் தற்பொழுது சந்தேகிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமது கட்சியில் இணைந்து செய்துகொள்ளுங்கள் என்ற அறைகூவலையும் எதிர்வரும் நாட்களில் விடுக்கலாம். இதுவரை காலமும் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமையின் பால் இக்கட்சிகள் செயற்படுகின்றன என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டியது அவசியமாகும். சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகப்பேச்சாளராக இருக்கின்றார் எனினும் சுமந்திரன் அவர்கள் முந்தியதன் காரணமாகவே இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யத்தான் வேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது. ஏனைய கட்சிகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை விட்டு பிரிந்துசென்று ஒருவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்தாலும் அல்லது ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற கட்சிகள் இணைந்து செயற்பட்டாலும், ரெலோக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் இதற்கு சம்மதிக்கப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறாகவிருப்பினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சின்னாபின்னமாக்குவதிலேயே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமையை பேணிப்பாதுகாக்கவேண்டும். கூறாத விடயங்களையெல்லாம் கூறுகின்றார்கள் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமும் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்படவேண்டுமா? என்பதை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களும், பொதுமக்களுமே தீர்மானித்து, அதனை பரிசீலனை செய்து, பின்னரே தமிழ்த்தேசியக்கூட்மைப்பு பதிவு செய்யப்படுமே தவிர, ஏனைய கட்சிகள் தமது அதிருப்தியை அல்லது பதிவு செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்தியோ அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்பதுதான் இன்றைய அரசியல் நீரோட்டத்தின் உண்மைத்தன்மையாகும்.

SHARE