தமிழ்த்தேசியத்தை நேசித்தமையால் தமிழ்மக்கள் எனக்கு வாக்களித்தனர் – அனந்தி சசிதரன்

482

வடமாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, தொலைபேசியில் தொடர்புகொண்டபொழுது, தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வி.

கேள்வி :- திருகோணமலையில் நடைபெற்ற தெரிவுக்குழுக்கூட்;டத்தில் நீங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பல செய்திகள் வெளிவந்தன. இதுதொடர்பில் என்ன நடந்தது என்று கூறமுடியுமா?
பதில்:- நான் ஜெனிவாவிற்கு சென்றுவந்த காலப்பகுதியில் வீரகே சரி பத்திரிகைக்கு தவறான முறை யில் செவ்வி வழங்கியிருந்தேன் என்றும், பிழையான அறிக்கைகளை பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது என்றும், கட்சியினருடைய அனுமதியின்றி தன்னிச்சையாக செயற்படக்கூடாது என்றும் கூறியிருந்தனர்.

கேள்வி :- தமிழ் என்ற சொற்பதம் ஜெனிவா அமர்வுகளில் பேசப்படவில்லை. இதுதொடர்பில் நீங்கள் எழுந்தமான முறையில் ஜெனிவாவில் பேசியதாக சுமந்திரன், சம்பந்தன் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்களே?

பதில்:- இதுதொடர்பாக திரு கோணமலையில் நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின்போது நான் ஒரு அறிக்கையையும் வாசித்தேன். ஜெனிவாத் தீர்மானமும், தென்னாபிரிக்கத் தீர்மானம் தொடர்பிலும் பேசினேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களினுடைய கருத்துக்கள் போன்று நீங்கள் கூறுகின்றீர்கள் என்று சுமந்திரன் கூறியிருந்தார். அத னால் நான் சற்றுகோபமடைந்தேன். கூட்டமைப்பைவிட என்னுடைய கருத்து சற்றுவித்தியாசமாகத்தான் இருக்கும். காரணம் நான் எல்லாவற்றையும் யுத்தத்தினால் இழந்திருக்கின்றேன்.

கேள்வி :- குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். ஆயுதப் போராட்டத்தின் வழியாக வந்தவர்களுடைய கருத்துக்களை பொது வாகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ளவர்கள் அதாவது சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்று மக்கள் கருதுகின்றார்களே? இதனை நீங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்?

பதில்:- என்னோடு கதைக்கின்றபொழுதும் மக்கள் அவ்வாறு கூறுகின்றார்கள். ஆயுதம் ஏந்திப்போராடியவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களை ஓரங்கட்டுகின்றார்கள் என்று. ஏன் ஆரம்பகாலகட்டங்களை எடுத்துக்கொண்டால் சம்பந்தன் ஐயாவு டைய கருத்தும் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தியவர்கள் என்று ஒரு படி பின்வைத்துப் பார்த்த வரலாறுகளும் இருக்கின்றது. நான் ஆயுதம் ஏந்தி போராடவில்லை. நான் ஒரு போராளியினுடைய மனைவி என்ற வகையில் என்னையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடும். அவ்வாறான நிலைப்பாட்டை மக்கள் வெறுத்துவருகின்றனர் என்பதுதான் உண்மையான நிலைப்பாடு.

கேள்வி :- இன்று பார்க்கின்றபொழுது, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் காலத்தின் தேவை கருதி விடுதலைப்புலிகளின் காலகட்டத்தில் அரசுடன் இணைந்திருந்துவிட்டு, பின்னர் தமிழ்த்தேசியம் பேசிவிட்டு இன்று கூட்டமைப்புடன் இணைந்து அவர்களுடைய அரசி யல் காய்நகர்த்தல்களுக்காக இன்று தமிழரசுக்கட்சியுடன் இணைந்த ஒரு கூட்டமைப்பாக காணப்படுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களினது நிலைமை களை நன்கு அறிவீர்கள். இதனை வைத்துக்கொண்டு உலகளாவிய ரீதியி லும் ஏனைய தரப்புக்களுடனும் நீங்கள் குரல்கொடுக்கின்றபொழுது, அவர்களை விடவும் நீங்கள் முன்னேற்றகரமான முறைக்கு வந்துவிடுவீர்கள் என்கின்ற காரணத்தினால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றவர்கள் உங்களுக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுக்கின்றார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்:- நான் 2013 ஆம் ஆண்டு அரச உத்தியோகத்தராக இருந்தபொழுது ஜெனிவாவிற்கு போவதற்காக ஆயத்தமானபோது அரச அதி காரிகளால் அந்த விடுமுறை அனுமதிக்கப்படவில்லை. 2013 ம் ஆண்டு ஜெனிவா சென்றிருந்தேனாகவிருந்தால் நான் ஒரு தனி மனிதனாக கட்சியினது கொள்கை ஏனைய விடயங்களுக்கு அப்பால் பேசியிருப்பேன். தற்போது பேசியது போன்று முதற்தடைவை சென்றுபேசியிருந்தால், எனது பேச்சுக்கள் பயனற்றுப்போயிருக்கும். தற்போது நான் 80000இற்கும் மேற்பட்ட மக்களின் பிரதிநிதியாக சென்றதன் காரணமாக, பாதிக்கப்பட்ட நபர் என்கின்ற அடிப்படையிலும், வடமா காணசபை உறுப்பபினர் என்ற வகை யிலும் என்னுடைய பேச்சுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜெனிவாவில் நான் உரையாற்றிய பின்பு பல புத்திஜீவிகள் வரவேற்றிருந்தார்கள். பாராட்டுதல்களையும் தெரி வித்திருந்தார்கள்.

கேள்வி :- இன்றைய அரசியலைப்பொறுத்தவரை தமிழ் மக்களினுடைய செல்வாக்கு உங்களது பக்கம் மேலோங்கியிருக்கின்றது. அந்தஅடிப்படையில் யாழ் மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிப்போர் எதிர்வரும் தேர்தல்களில் ஆசணங்களை இழக்க நேரிடும் என்ற நோக்கில் உங்களை ஏதாவதொரு விதத்தில் நசுக்குகிறார்கள் என்று கருதுகிறீர்களா?

பதில்:- நான் அவ்வாறு நினைக்கவில்லை. எல்லோரும் ஒரு குடையின் கீழ் செயற்படவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

கேள்வி :- ஆனால் மக்களின் கருத்துக்கள் அவ்வாறு இருக்கின்றனவே?

பதில்:- மக்களுடைய விருப்பம் அவ்வாறு இருக்கின்றது. அது சரிதான். நான் நீண்டகால அரசியல் நோக்கோடு வரவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும். சர்வதேசத்திற்கு துல்லியமாக எடுத்துச்சொல்லவேண்டும். அதனையே நான் மையப்படுத்தி வந்தேன். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப நான் பாராளுமன்ற தேர்தலையும் எதிர்நோக்குவதற்கு தயாராக இருக்கின்றேன்.

கேள்வி :- தமிழ்த்தேசியத்தினை நேசித்துதான் தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? பதில்:- ஆம்.

கேள்வி :- இன்று நீங்கள் தமிழ்மக்களுடைய அதிகப்படியான வாக்குகளை பெற்றிருக்கின்றீர்கள். உண்மையில் நீங்கள் ஒரு அமைச்சர் அந்தஸ்துடையவராக இருந்திருக்கவேண்டும். ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலும் தமிழரசுக் கட்சி என்ற குழு ஒன்று இருக்கின்றது. யாரை அமைச்சராக நியமிக்கவேண்டும், யாரை நியமிக்கக்கூடாது, யாரை வெளிநாடுகளிற்கு அனுப்பவேண்டும், யாரை தன்பக்கம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று தீர்மானிப்பார்கள். உங்களை மட்டுமல்ல ஏனைய ஆயுதப்போராட்டத்தின் வழியாக வந்தவர்களையுமே. இதுபற்றி உங்களின் கருத்து என்ன?

பதில்:- ஒருவிடயம் நான் கட்சிக்கு கட்டுப்படவில்லை என்கின்ற விடயத்தை கூறியிருந்தார்கள். எனக்கும் தற்பொழுது அரசியல் புதிதாக இருக்கின்றது. கட்சிக்குள்ளே என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றது என்பது பெரிதளவில் தெரியாது. நான் அவர்களுடைய யாப்பை படிக்கவில்லை. அரசியல்வாதிகளாக இருந்துகொண்டு வியாபார வர்த்தகங்கள் அல்லது வேறு பல விடயங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்ற காரணத்தினால் நான் ஒரு அரசியல்வாதியாக இருந்துகொண்டு ஏன் இவ்வாறான விடயங்கள் பற்றி பேசக்கூடாது என்று கருதியே நான் ஜெனிவாவில் உரையாற்றினேன்.

கேள்வி :- இதனடிப்படையில் இனி நடைபெறவிருக்கின்ற வெளிநாட்டுப்பேச்சுக்களுக்கு உங்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் அழைத் துச் செல்லமாட்டார்கள் என்றுதானே இக்கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது?

பதில்:- நிச்சயமாக அழைத்துச்செல்ல மாட்டார்கள் என்றுதான் நான் கருதுகின்றேன். ஏனென்றால் ஏற்கனவே எட்டுபேர் அடங்கிய குழுவொன்றை அவர்கள் தெரிவுசெய்துள்ளனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக அவர்கள் தான் இனி சர்வதேச விடயங்களை கையாள்வார்கள்.என்னை அவர்கள் அந்தக் குழுவில் அங்கத்தவராக இணைத்துக்கொள்ளவில்லை. இனி வரும் காலங்களில் என்னை அவர்கள் அழைப்பார்கள் என்று நினைக்கவில்லை. எனது சொந்த விடயம் சார்பாக நான் வெளிநாடுகளிற்கு செல்லலாம். அங்கு மனித உரிமை மீறல்கள் குறித்து பேசலாம் என நினைக்கின்றேன்.

கேள்வி :- நீங்கள் கிட்டத்தட்ட எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களது செல்வாக்கினைப் பெற்றிருக்கின்றீர்கள். உங்களைவிடவும் குறைந்த அள வில் மக்கள் செல்வாக்கினைப் பெற்றவர்களே இன்று உயர்ந்த பதவி களில் அங்கம் வகிக்கின்றார்கள். இது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேண்டுமென்றே செய்த செயலல்லவா?
இது தொடர்பில் எனக்கு ஐயப்பாடு உள்ளது. நான் யாரிடம் கேட்பது. பொதுத்தேர்தலின் போது அதிகபடியான வாக்குகளைப் பெற்றவர்களுக்குத்தான் பதவிகளை வழங்கியிருந்தார்கள். ஆனால் மாகாணசபைத்தேர்தலில் அவ்வாறானதொரு நிலைப்பாடு இல்லை எனக்கூறுகின்றார்கள். அதற்காக நான் அவர்களிடம் எனக்கு பதவி தாருங்கள் எனக்கேட்கவில்லை. நீங்கள் கேட்பது போன்று என்னிடம் பலர் இவ்வாறு கேட்டார்கள். பதவி எனக்கு பெரிதல்ல. நான் மக்களுக்குச் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றது. இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்கான வழி எனக்கு கிடைக்கவில்லை.
கேள்வி :- சம்பந்தன் அவர்களைப் பொறுத்தவரையில் சந்திரிக்கா அம்மையார் ஆட்சியின் போது உயர் பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டு செல்லப்பிள்ளையாக இருந்து விடுதலைப்புலிகளுக்கு நெருக்கடிகளை கொடுத்தார். அதன் பின்னர் சமாதான பேச்சுவார்த்தையின் பின்னர்தான் ஆதரவாகப் பேசினார். அதற்கு முன் விடுதலைப்புலிகளினுடைய சுநன டுளைவ இல் அவருடைய பெயரும் இருந்துவந்தது. இவ்வாறான நிலையில் முள்ளிவாய்க்காலோடு தமிழர் பிரச்சினை முடிந்துவிட்டது. இனி மஹிந்தவின் அரசியலோடு இணைந்து செல்வோம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சம்பந்தன், சுமந்திரன் போன்றோரின் செயல்நகர்வுகள் இருக்கின்றன. உண்மையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்:- நான் அவ்வாறு அரசுடன் இணைந்துதான் செயற்படுகிறார்கள் என்று கருதவில்லை. மக்கள் பல கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

கேள்வி :- செயற்பாடுகளைப் பார்க்கின்றபொழுது அவ்வாறுதானே விளங்குகின்றது?

பதில்:- மக்கள் எனக்கு வாக்களித்ததன் படி என்றைக்கும் மக்களினது அபிலாஷைகளை நிறைவேற்றும் வகை யிலே செயற்படுவேன். அரசதரப்போடு இணைந்து அரசி யல் செய்பவர்களும் சரி, ஏனையோரும் சரி துரோகி என்று பட்டம் சூட்டினாலும் என்னைக் கொன்றாலும் பரவாயில்லை. ஆனால் நான் தெளிவாக இருக்கின்றேன். எனக்கு வாக்களித்த தமிழ்மக்களுக்கெதிராக மாற்று நடவடிக்கைகளை எடுக்கமாட்டேன். அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படுமாயின் இந்த மாகாணசபைப் பதவியினைக் கூட இராஜினாமா செய்வேன்.

கேள்வி :- திருகோணமலை யில் நடைபெற்ற சம்பவமானது உங்களை உயர்மட்டக்குழுவில் இணைத்துக்கொள்ளாதது கட்சி எடுத்த தீர்மானமா?

பதில்:- கட்சியிலுள்ளவர்கள் எல்லோரும் ஆமோதித்தபொழுது நான் தனித்துநின்றேன். என்னுடைய கருத்துக்களை நியாயப்படுத்த அங்கு யாரும் இருக்கவில்லை. அவ்வாறு நியாயப்படுத்தியிருந்தால் அவர்களும் அக்குழுவில் அங்கம் வகிக்க தெரிவுக்குழு அனுமதித்திருக்கமாட்டாது என நினைக்கின்றேன். காரணம் நான் பதவிக்காக அரசியலுக்குள் வரவில்லை.

கேள்வி :- வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் உங்களைவிடவும் பன்மடங்கு பாராளுமன்றத்திலும், வெளி நாடுகளிலும் சரி அரசாங்கத்தை வெளுத்துவாங்கியது மட்டுமல்ல தமிழ்மக்களுடைய போராட்டத்தை ஆதரித்து பேசியிருக்கின்றார். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எடுக்கவில்லை. ஏன் உங்களுக்கு மட்டும் இந்த நிலைமை?

பதில்:- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்புரிமை இருக்கின்றது. எங்களுககு இல்லையென்று தான் நான் நினைக்கின்றேன். ஆனால் ஜெனிவா அமர்வின் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக எந்தவிதமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. உண்மையான நிலைப்பாட்டை மட்டும் எடுத்துக்கூறினேன்.

கேள்வி :- இதற்குப் பின்னர் எவ்வாறான அரசியல் நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளீர்கள் ?

பதில்:- மக்கள் என்பக்கம் இருக்கின்றார்கள். காலத்தினைப் பொறுத்து என்னுடைய அரசியல் நகர்வினை செயற்படுத்துவேன்.

– நன்றி –

 

SHARE