தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற தேசிய உரிமை முழக்கத்துடன் தமிழர் தாயகத்தின் இதயமாக சொல்லக்கூடியவடமராட்சி மண்ணில் கரவெட்டி பிரதேச சபா மண்டபத்தில் விடுதலைஉணர்வுடன் கூடிய மக்கள் எழுச்சியுடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வணக்கத்துடன் தேசியவிடுதலைப்போராட்டத்தில் தங்களை ஆகுதியாக்கிய வீரமறவர்களுக்கு அகவணக்கம் செலுத்தலுடன் சற்று முன்னர் ஆரம்பமாகியது தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் 5 வது வருடாந்த தேசிய மாநாடு.









