தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

274

 

எதிர்பார்த்தது… நடக்கும் என பலர் கூறியது.. பலர் நினைத்தது… அனைத்துக்கும் பதில் கிடைத்து விட்டது. தேர்தலும் முடிந்துவிட்டது. முடிவுகளும் வந்துவிட்டன. பிரதமரும் பதவியேற்றுவிட்டார். ஆனால் அமைச்சரவை இன்னும் பதவியேற்கவில்லை.

sampanthan_7

இந்நிலையில் எவ்வாறு அரசாங்கம் அமையப் போகின்றது என்பதனை அனைவரும் எதிர்பார்த்தனர். ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவும் அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது தேசிய அரசாங்கம் அமையவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்ற கேள்விகளுக்கு பதில் தேடவேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதால் மூன்றாவது அரசி யல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக வரவேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரே எதிர்க்கட்சியா கவும் செயற்படவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது. உறுதியான முடிவு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் கடந்தவாரம் நடைபெற்றது. கூட்டம் ஆரம்பமானதும் கண்டி மாவட்ட பிரதிநிதி ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சேர். தேசிய அரசாங்கம் அமைப்பதனை ஏற்கிறோம். ஆனால் அமைச்சுப் பதவிகள் உரிய முறையில் பகிரப்படவேண்டும். ஐக்கிய தேசிய கட்சி ஆதிக்கம் செலுத்தும் வகையிலான தேசிய அரசாங்கத்துக்கு இடமளிக்க முடியாது. அமைச்சுப் பதவிகளை பகிரும்போது சுதந்திரக் கட்சிக்காரர்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். குறிப்பாக அமைச்சரவையை நான்கு பிரிவுகளாக பிரித்து அவற்றை சதவீதங்களின் அடிப்படையில் சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பிரித்து வழங்கவேண்டும்.”” என்று கண்டி மாவட்ட பிரதிநிதி கூறியுள்ளார்.

இதற்கு ஜனாதிபதி பதிலளிக்க முன்னர் குறுக்கிட்ட மாத்தறை மாவட்ட பிரதிநிதி,

“சேர்… நாங்கள் தேசிய அரசாங்கம் அமைத்தால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆதிக்கம் செலுத்துவாரே… என்ன செய்வது? என்று கேட்டுள்ளார். இறுதியில் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “”இது மைத்திரி நிர்வாகம் என்று மனதில் கொள்ளுங்கள்”” என்று கூறிவிட்டாராம். நெத்தியடிதான்.

அதன் பின்னர் மீண்டும் கண்டி மாவட்ட பிரதிநிதி பேச ஆரம்பித்துவிட்டாராம். இப்போது என்ன பேசியிருப்பார்? அவர் பேசியதையே பார்போம். அவர் பேசுகிறார்..

” ஜனாதிபதி அவர்களே.. சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்தால் எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகரிக்கப்படவேண்டும். அத்துடன் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கவேண்டும். ஆனால் ஒரு சிக்கல் உள்ளது. அரசியல் விஞ்ஞானத்தின் பிரகாரம் எதிர்க்கட்சி என்பது நாடு ஒன்றின் மாற்று அரசாங்கமாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படும்போது வெளிநாடுகளுக்கு சென்று இலங்கைக்கு எதிராக பேசிவிட்டால் அது சிறந்த விடயமாக அமையாது.

எனவே கொள்கையின் அடிப்படையில் கூட்டமைப்பை எதிர்க்கட்சியாக நியமிக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். ஆனால் இப்படி ஒரு பிரச்சினையும் இருக்கின்றது”” என்று கூறினாராம் கண்டி மாவட்ட பிரதிநிதி.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி “உங்களின் கூற்றுடன் நூற்றுக்கு ஆயிரம் வீதம் நான் உடன்படுகின்றேன்”” என்று கூறினாராம்.

இறுதியில் தேசிய அரசாங்கம் குறித்து தீர்மானம் எடுக்க நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கே இந்த விடயத்துக்கும் தீர்வுகாணுமாறும் கூறப்பட்டதாம். நடக்கட்டும். இல்லை. இல்லை. என்னதான் நடக்கட்டும் பார்ப்போம்….

SHARE