நேற்று முன்தினம் மொனராகலை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை வியாழேந்திரன நேரில்ச் சென்று பார்வையிட்டு அவர்களது சுயநலம் விசாரித்தார். இது தொடர்பில் எம்.பி வியாழேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்
கதிரவேல் கபிலன், பெருமாள் சந்திரசேகரம், சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் அகியோர் அங்கிருப்பதாகவும் அவர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் எட்டு நாட்கள் இருந்து வருவதனால் அவர்களுடன் கதைக்கமுடியாத சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்த அவர் இது போன்று மட்டக்களப்புச் சிறைச்சாலையில் 12 அரசியல் கைதிகள் இருந்தார்கள். அதில் நால்வர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மிகுதி எட்டுப்பேரும் தொடர்ச்சிhக உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் தெரிவித்த அவர்.
2011ம் ஆண்டு மாவீரர் தினம் தொடர்பாக கையடக்கத் தொலைபேசிகளுக்கு SMS அனுப்பிய மாணவர் ஒருவரும் அங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். கைதிகளின் விடையம் தொடர்பில் பேசுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சோதிராஜா அவர்களும், சித்தார்த்தன் அவர்களும் மட்டக்களப்பிற்கு வர இருக்கின்றார்கள். அவர்களிடமும் இவ் விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து இதற்கான ஒரு முடிவை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.