தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

267

 

தமிழர் பிரச்சினை குறித்து அரசியல் பேரவைக்கு யோசனைகளை சமர்ப்பிப்பதற்காக, கிளிநொச்சியில் நடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்றுள்ளார்.
  P1000768
P1000766

thinappuyalnews.comதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் -சம்பந்தனை பலப்படுத்துவோம்! சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவிப்பு

Posted by Thinappuyalnews on Thursday, 21 January 2016

தேசிய அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்படவேண்டிய தமிழர் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆராயும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டம் ஆரம்பமானது போது கலந்து கொண்டிருக்கவில்லை.

 

இந்நிலையல், பிற்பகல் 3.30 மணியளவிலேயே அவர் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பந்தனை பலப்படுத்துவோம்! சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவிப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட ஏனையோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர்,

நாம் வடக்கு மாகாணத்துக்கு தெரிவாகி 3 வருடங்களாகிறது. இந்த 3 வருடங்களில் நாங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்கள் அதிகமானவை. மாகாண சபைக்குள்ளே ஒரு செயலைப்புரிவதற்கு மத்திய அரசாங்கம் எவ்வளவு தூரம் தடையாக இருந்து வருகிறது என்பதை நாங்கள் அனுபவங்கள் ஊடாக கண்டுகொண்டோம்.

ஆகவே மாகாணங்களுடைய அதிகாரம் என்பது பகிரப்பட முடியாததாக உருவாக்கப்பட வேண்டும் என்பதிலே நாங்கள் திடசங்கற்பமாக உள்ளோம். சம காலத்திலே கிராம ராச்சியங்கள் என்ற போர்வையில் அதிகாரத்தை மாகாணசபையிடமிருந்து பிரித்தெடுப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. இந்த விடயத்திலே இன்று கூடியிருந்தவர்கள் எல்லோரும் தெரிவித்தது போல அரசியல் தீர்வு தொடர்பில் ஒருமித்து செயற்படுவோம். நாங்கள் மக்கள் அபிப்பிராயத்தை பெறுவோம். கருத்துக்கள் கலந்தாய்வுகளை மேற்கொள்வோம். அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம். தீர்வு யோசனைகளை தொகுத்து கட்சி தலைமையிடம் கையளிப்போம். இங்கு சம்பந்தன் அவர்கள்  தீர்வு யோசனை தொடர்பில் தெளிவான விளக்கத்தை அளித்தார். ஆகவே எல்லோருமாக சேர்ந்து கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய உழைப்போம் என்றார்.

SHARE