தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடிஹப்புஹாமி பியசேனவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பியசேனவை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட வாகனமொன்றை மீள வழங்காது மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி 10,000 ரூபா ரொக்கம் மற்றும் 300,000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் அடிப்படையில் பியசேனவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பியசேன வாகனத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னரும் வாகனத்தை மீள ஒப்படைக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.