தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடே எழுக தமிழ் போராட்டம் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலையின் வெளிப்பாடே இந்த எழுக தமிழ் போராட்டம் என சுட்டிக்காட்டியுள்ள அவர் எழுக தமிழ் போராட்டத்தின் பின்னணியில் காலணித்துவ சக்திகள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியின் தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விக்னேஸ்வரன் இவ்வாறு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.