தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாக தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

160

(பாராளுமன்ற உறுப்பினர் – ச.வியாழேந்தின்)

இந்த உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் பல பாடங்கள் கற்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாக தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிடில் எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நிச்சயாக எமது இடங்களைத் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வெல்லாவெளியில் இடம்பெற்ற ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கட்சிக் காரியாலய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தைப் போன்று கிழக்கு மாகாணத்தின் நிலைமை இல்லை. கிழக்கு மாகாணத்தின் நிலை பற்றி இன்னும் தீவிரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை சிந்திப்பதாக இல்லை. காரணம் கட்சியில் இருந்து விலக்கி விடுவார்கள் அத்தமுறை தேர்தலுக்கு வாய்ப்புத் தரமாட்டார்கள் என்பதால் இந்த உண்மையசை; சொல்லப் பயப்படுகிறார்கள்.

எமது விடுதலைப் போராட்ட காலத்திலே ஒரு அங்குலக் காணிகூட பறிபோகாத நிலையில் இன்று எங்கள் கண்முன்னே ஆயிரக்கணக்கான காணிகள் எம்மவர்க்கு பாதுகாத்த எம்மவர்களுக்கான காணிகள் பறிபோகின்றன. நாளை நம் வீட்டு முற்றம் பறிபோய்விடுமோ என்ற பயத்திலே தான் கிழக்கு மக்கள் வாழ்ந்து கொண்டிக்கின்றார்கள்.

கரடியனாற்றில் 200 ஏக்கர் காணியை நீர்பாயும் குளத்தையும் சேர்த்து அடைத்து இந்த மாகாணத்தில் மாவட்டத்தில் இருக்கின்ற சோரம் போகின்ற நிலப்பற்றும் இனப்பற்றும் இல்லாத ஒரு சில தமிழ் அதிகாரிகளைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்தி ஒரு சிலர் சுற்றாடல், வன இலாகா, வனஜீவராசிகள், பிரதேசபைகள் அனைத்து அனுமதிகளையும் பெற்று அங்கே நீரை உறிஞ்சுகின்ற தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது.

குடிநீர் இல்லாமல் எமது மக்கள் அவதியுறும் வறட்சியான அந்தப் பகுதயிலே நிலத்தடி நீரை உறிஞ்சும் அந்த தொழிற்சாலை அங்கு அமைக்கப்படவுள்ளது.

கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட உள்ளூட்சி சபைகளில், ஏறாவூர்ப்பற்று, ஆரயம்பதி, வாழைச்சேனை ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் வந்திருக்க வேண்டிய சபைகள் ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டமிடல் ஒரு சிலரின் தூரநோக்கு இல்லாத காரணங்களால் அவை பறிபோயின. ஏறாவூர் நகரசபையில ஒரு திட்டமிட்ட முடிவு எடுக்கப்படாமையால் வழைச்சேனைப் பிரதேசசபை அடுத்த நாளே பறிபோனது.

இந்த உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் பல பாடங்கள் கற்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாக தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிடில் எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நிச்சயாக எமது இடங்களைத் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் இருக்கின்றது. ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி யாரை எம்மோடு சேர்க்க வேண்டும் என்ற ஒரு இணைப்பை எற்படுதிக் கொள்ள வேண்டும்.

ஒழுங்கான ஆக்கபூர்வமான, ஒருங்கமைந்த திட்டங்களை நாங்கள் வேகமாக மேற்கொள்ளாது விட்hடல் வருகின்ற மாகாணசபையை நிச்சயமாக நாங்கள் இழந்துவிடுவோம். அவ்வாறு இழந்துவிட்டால் அடுத்த ஐந்து வருடத்திலே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்புகள் கேள்விக்குள்ளாக்கப்படும்.

பெயர்மாற்றங்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள் என்பவற்றை தங்களுடைய சமுகத்தின் இருப்புக்காக இராஜதந்திராக ஏனைய சமூகங்கள் மேற்கொள்கின்றன. நாங்கள எமக்குள் ஒருமித்த கருத்தின்மை, திட்டமிடல் இன்மையால் பலவற்றை இழந்துகொண்டிருக்கின்றோம்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தே;தலில் சில வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றமைக்கு காலம் தாழ்த்திய முடிவுகளே காரணமாகும். வருகின்ற மகாணசபைத் தேர்தலுக்காக எமது தலைமைததுவங்கள் கூடி எவ்வித திட்டமிடல்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. நாம் தாமதிக்கின்ற ஒவ்வொரு நேரமும் எமது இருப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.

SHARE