தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் விஸ்தரிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் கூட்டமைப்பு ஈடுப்படவிருப்பதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்காக கூட்டமைப்பினுள் புதிய கட்சிகள் மற்றும் அமைப்புகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர்,
எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில், அதற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.