தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி

244

தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டி முதல் முதலாக தமிழகத்தில் நடத்தப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற T20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருவள்ளூர் வீரன்ஸ் அணியை எதிர் கொண்டது.

இப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி துடுப்பெடுத்தாடுவதை தெரிவு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய அணித்தலைவர் சற்குணமும், கோபிநாத்தும் தங்களின் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி தங்களது அணிக்கு அடித்தளம் அமைத்தனர்.

பின்பு, அணித்தலைவர் சற்குணம் லட்சுமி நாராயண் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து 13 ஓட்டங்களில் அவுட் ஆக அடுத்ததாக களமிறங்கிய வசந்த் சரவணன்கோபிநாத்துடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர்.

இறுதியாக20 ஓவர்கள் முடிந்த நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்கை தட்டிச் செல்லலாம் என்ற நிலையில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிஷாந்த் 2(4), கவின் 1(6) என்ற சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க அணியின் நிலை தடுமாறத் தொடங்கியது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 113ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருவள்ளூர் வீரன்ஸ் அணியை அதிரடியாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

625-0-560-320-500-400-194-800-668-160-90

SHARE