தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப்பயணியாகச் சென்ற முப்பது வயதினையுடைய இலங்கை பெண் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

496

தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப்பயணியாக வந்த இலங்கை பெண் உள்ளாடைகளில் தங்க செயின் மற்றும் தங்ககட்டிகளை மறைத்து வைத்திருந்ததால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் கொழும்புவிலிருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 08.45 மணிக்கு  சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு தரையிறங்கியுள்ளது.

அந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த கோமளா என்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் சுற்றுலாப்பயணியாக சென்னைக்கு சென்றுள்ளார். குறித்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது, கோமளாவின் உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.

ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் அதிகாரிகளுக்கு கோமளாவின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், சுங்கத்துறை பெண் அதிகாரிகள் மூலம், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது கோமளாவின் உள்ளாடைகளில் புத்தம் புதிய தங்க செயின் மற்றும் 12 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மொத்த எடை 645 கிராம் எனவும், அதன் சர்வதேச மதிப்பு 19 லட்சம் ரூபாய் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கோமளாவை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நேற்று காலை 9.50 மணிக்கு, சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த அகமதுகான் (43) என்பவர் துபாய்க்கு சுற்றுலா பயணியாக துபாய் செல்ல இருந்தார். அவரை சுங்க அதிகார்கள் சோதனை செய்த போது, உடல் முழுவதும் சவுதி ரியால் கரன்சியை வைத்து டேப் போட்டு ஒட்டி, அதன் மீது உள்ளாடைகளை அணிந்து இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

அதன் பின் அவரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட கரன்சியின் இந்திய மதிப்பு 19.5 லட்சம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE