தமிழ்ப் பாடசாலையின் உயர்தர மாணவி சடலமாக மீட்பு

105

 

பலாங்கொடை, பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது நேற்று (11.02.2024) வீட்டார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பலாங்கொடை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணை
இதன்போது பலாங்கொடை பிரதேசத்தில் பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பிரேத பரிசோதனைக்காக மாணவியின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE