தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்ள அவசர இலக்கம் அறிமுகம்

97

 

தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்வதற்கான 107 அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டு நாளைய தினத்தில் இருந்து முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அவசர இலக்கம்
ஜனாதிபதியின் எண்ணக்கருவின் ஆலோசனைக்கு அமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவசர இலக்கம் ஊடாக தமிழ்மொழியில் தொலைபேசி மூலமாக முறைப்பாடுகள் மேற்கொள்வதற்கான செயற்திட்டம் நாளைய தினத்தில் இருந்து நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் உத்தியோகத்தர்கள்
இதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொதுமக்கள் சந்திப்புக்கு நாளையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் மக்கள் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் இருக்கும் போது 2016 ஆம் ஆண்டு தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்வதற்கான புதிய இலக்கத்தினை அறிமுகப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE