சிறிலங்கா சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது
கடந்த 20/12/2005 ஞாயிற்று கிழமை அன்று பிரித்தானிய தலைநகரான லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது காலை 11மணிக்கு ஆரம்பமாகிய இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடை பெற்றது ..இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை போர்க்கைதிகளாக அங்கிகரித்து அவர்களது பாதுகாப்பினையும் விடுதலையினையும் வலியுறுத்தி இலங்கை அரசிடம் பிரித்தானிய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அனைத்துலக சமூகத்திடம் கோரும் முகமாகவும் இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப் போராட்டத்தில் மழை குளிர் என பாராது நூற்றுக்கணக்கான ஈழத்து புலம்பெயர் உறவுகள் கலந்து கொண்ட மையும் இங்கு குறிப்பிடத்தக்கது