தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை – ஐ.நா.சபைக்கு மகஜர் கையளிப்பு

142

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா.சபைக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமீனன் உள்ளிட்ட நடைப் பயணப் போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நேற்றைய தினம் ஐ.நா.வின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று இந்த மகஜரைக் கையளித்தனர்.

இதன்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான நடை போராட்டத்தின் ஊடக அறிக்கையும், அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் மகஜரும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE