தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு:-

284

நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி அவர்களால் மேற்கொள்ளப்படும் உண்ணாநோன்புப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தமது முழு ஆதரவினை வழங்குகிறது. எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பரீட்சை தவிர்ந்த ஏனைய விடயங்களை இடைநிறுத்தி தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு  வலுச்சேர்க்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தமது உறுப்பினர் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கின்றது.
அதேநேரம் அகிம்ஷை ரீதியில் நிகழும் உண்ணாநோன்புக்கு வலுச்சேர்க்கும் போராட்டத்தை அமைதியாகவும் வன்முறை ஏதும் நிகழாதும் பார்த்துக் கொள்வதோடு மிகமிக அத்தியாவசிய விடயங்களில் தளர்வுப் போக்கினைக் கடைப்பிடிக்கும்; அதே வேளை கடந்தகால அனுபவங்களையும் மனதில் கொண்டு செயல்படுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

SHARE