தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, யாழில் உண்ணாநோன்பு போராட்டம்

396

 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, யாழில் உண்ணாநோன்பு போராட்டம்

இலங்கையின் பல்வேறு சிறைகளில் நீண்டகாலம் விசாரணைகள் கூட நடத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுதலை செய்யக்கோரி, தமிழ் அரசியல் கைதிகள் உண்ணா நோன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் யாழ்.மாவட்டத்தில் நல்லூர் ஆலய முன்றலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் அடையாள உண்ணாநோன்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் காலை 8 மணி தொடக்கம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் மாகாணசபை அவைத்தலைவர், மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த உண்ணா நோன்பு போராட்டம் இன்றைய தினம் நண்பகல் 12.30 மணி வரையில் நடைபெறவுள்ளது.

சிறைச்சாலைக் கைதிகளின் உண்ணாவிரதம்: யாருடைய ஆதரவை எதிர்பார்கிறார்கள்? ஆதங்கத்தில் ஒரு குரல்

SHARE