தமிழ் அரசியல் கைதிகள் நேற்று 8ஆவது நாளாகவும், தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தனர்.

302

 

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 15 அரசியல் கைதிகளின் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சையை ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

12219388_495405260638395_882983948289705939_n

தமிழ் அரசியல் கைதிகள் நேற்று 8ஆவது நாளாகவும், தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தனர்.
நேற்று முன்தினம் நண்பகலுடன், மருத்துவ சிகிச்சைகளையும் புறக்கணிக்க இவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று உடல் நிலை சோர்வடைந்திருந்த 15 அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமானது.
இதையடுத்து, சிறைச்சாலை மருத்துவர்கள் அவசர மருத்துவ உதவிகளை வழங்க முற்பட்ட போதும், அரசியல் கைதிகள் அதனை நிராகரித்து விட்டதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரியசீலன், சிவசீலன், தவரூபன், ஜெயக்குமார், ஆகியோரும்,
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தர்ஷன், கனகசபை தேவதாசன், கிருஷ்ணகாந்தன், தனயுகன், பிரபாகரன், ஆகியோரும்,
யாழ்.சிறைச்சாலையிலுள்ள விஷால் இரத்தினம் பூபாலசிங்கம், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள முரளிதரன், யோகராஜா, தும்பறை போகம்பரைச் சிறைச்சாலையிலுள்ள கைதியொருவர் உள்ளிட்ட 15பேரே இவ்வாறு உடல் நிலை கவலைக்கிடமான நிலையை அடைந்துள்ளதாக தெரியவருகிறது

SHARE