வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் அவர்களின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும்,
நிச்சயமாக நாட்டுக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் ஏனைய
சமூகங்களுக்கு ஏற்படுத்தியுள்ள பேரதிர்ச்சியுமாகும். இலங்கையில் மிக அண்மைக்காலத்தில் ஏற்பட்ட
இழப்புக்களில் அன்னாரின் இழப்பு மிகவும் பேரிழப்பாகும். இந்த இடைவெளியை யார் நிரப்புவார்கள் என்பது
கேள்விக்குறியே.
தேரர் அவர்களின் தோற்றத்தில் காணப்பட்ட கம்பீரம் அவரின் பேச்சுக்களிலும் நடைமுறையிலும்
பிரதிபலித்தது. அவருடைய வார்த்தைகள் பொது மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தது. நீதியையும்
சமாதானத்தையும் ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் இலகுவானதல்ல.
‘எனக்கு ஆறு மாதங்கள் தாருங்கள் அதனை சாதித்துக் காட்டுகிறேன்’ என்று பொது மக்களுக்கு அவர் விட்ட சவால்
பொது மக்களை சிந்திக்க வைத்தது மட்டுமல்ல ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர காரணமாகவும் அமைந்தது. ஆனால் பல
பிரச்சனைகள் மத்தியில் அவருடைய செயற்பாடு மௌமான ஒரு புரட்சியை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் அவருடைய சாதனைகளை தெரிந்த நாம் விழித்தெழா விட்டால் அதனை பாதுகாக்க முடியாது. அவ்வாறான ஒரு
சந்தேகம் இருந்ததினாலோ என்னவோ அவர் அடிக்கடி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நாட்டு மக்கள்
மத்தியில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையோ,அமைதியையோ குறித்து அக்கறை கொள்ள நாம் பெரும்
முயற்சி எடுக்காவிட்டால் அதனை காப்பாற்ற முடியாது. நாம் எதை சாதிக்க வேண்டுமென நினைத்தோமோ அதனை
நடைமுறைப்படுத்துவதற்கு எமது முயற்சி போதாமையால் அதனை சாதிக்க முடியவில்லை.
தெரிந்தோ தெரியாமலோ அவருடைய பிரிவுக்கு நாமும் ஓரளவுக்கு பொறுப்பாளிகளே என்பதை நினைத்து
வெட்கப்பட வேண்டியுள்ளது. இந்த பூமியிலிருந்து அன்னாருடைய பூதவுடல் முற்றாக மறைவதற்கு முன்
மாண்புமிகு ஜனாதிபதி மை;திரிபால சிறிசேன அவர்களிடமும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க
அவர்களிடமும் கடைசி நேரத்தில் எனது கோரிக்கை யாதெனில் தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் வைத்திருப்பதை
தவிர்த்து அவர்கள் அனைவரையும் புனர்வாழ்வுக்கு அனுப்பி வையுங்கள். அத்தகைய ஒழுங்கு மிகவும்
பாராட்டத்துக்குரியதாகும். என்னுடைய பங்களிப்பாக சிறைகைதிகள் அனைவருக்கும் நீதிமன்றம்
ஏற்றுக்கொள்ளக்கூடிய பிணைப்பத்திரத்தில் கையnழுத்திட தயாராகவுள்ளேன்.
இந்த நாட்டு மக்களையும் அரசாங்கத்தையும், எதிர்கட்சியினரையும் இந்த நாட்டுக்க பாதகமில்லாத சாதகமான
ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம்- த.வி.கூ