தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 41 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று பகல் யாழ்ப்பாணம் முற்ற வெளியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சிவாஜிலிங்கம், பரஞ்சோதி எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் தலைவர்கள உப தலைவர்கள் உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள். நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.