தமிழ் இளைஞர்கள் கடத்தி கப்பம் பெற்ற கடற்படை அதிகாரி கைது !

278

தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில், கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கடத்தல், கப்பம், கொலை தொடர்பில், கடற்படையினர் 11 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டி ருந்தனர். முன்னாள் கடற்படைப் பேச்சாளரும் விசாரணைக்கு உட்ப டுத்தப்பட்டிருந்தார். விசாரணைக ளின் ஒரு படியாக கடற்படையிலி ருந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2008 d 2011ஆம் ஆண்டுக்கும் இடை யில் கொழும்பில் உள்ள தமிழ் இளைஞர்கள் பலர் கடத்தப்பட்டுள் ளனர். இவர்களில், கல்கிசையில் கடத்தப்பட்ட ஐந்து இளைஞர்களும், கொட்டாஞ்சேனையில் கடத்தப் பட்ட தந்தையும் மகனும் உள்ளடங் கியுள்ளனர். கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை மற்றும் கொழும் பில் உள்ள சைத் திய வீதி கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டி ருந்தனர்.

இதன் பின்னர் இவர்கள் கொலை செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப் படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள் ளப்பட் டன. இதன்போது முக்கிய சந்தேக நபராகச் சொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் அறை, குற்றப் புல னாய்வுத் திணைக்களத்தினரால் சோதனை செய்யப்பட்டது. கடத்தப் பட்ட ஐந்து இளைஞர்களின் அடை யாள அட்டைகள் மற்றும் கடவுச் சீட்டுகள் என்பன அங்கிருந்து கண்டு பிடிக்கப்பட்டன.

இந்தப் பின்னணியில் மூன்று கடற் படை அதிகாரிகள் உள்ளடங்கலாக, 11 பேர் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தனர். இதன் தொடர்ச் சியாக, முன்னாள் கடற்படைப் பேச் சாளர் கொமாண்டர் தசநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத் துக்கு அழைக்கப்பட்டு விசாரிக் கப்பட்டார்.தற்போது கைது செய்யப்பட்டிருப் பவரது பெயர் விவரத்தை, வெளி யிட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மறுத்துள்ளது.

 

SHARE