தமிழ் உணர்வாளர்களால் கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

671

தமிழ் மக்கள் தொடர்பாக கடந்த காலங்களில் ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள கருத்துக்களே அவர்களுக்கு ஹிஸ்புல்லா மீதான வெறுப்பை அதிகரித்துள்ளது.

எனவே ஹிஸ்புல்லா என்ற தனிநபரையே தாம் எதிர்ப்பதோடு, அரசியல் கட்சி சாராத ஒருவரே கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் உணர்வாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆவவே இவரது நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் ஹர்த்தால் முன்னெடுக்கபடவுள்ளதாகவும், இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனத்தில் கொள்ளாத பட்சத்தில் மக்கள் வீதிக்கிறங்கி போராட ஆரம்பிப்பர் எனவும் குறித்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE