தமிழ் உறவுகளை Free Sex க்கு கூடிய கூட்டம் என்று கூறிய Peta ஆர்வலரை வெளுத்து வாங்கிய தமிழச்சி!
தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்ற போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் Free Sex-ற்கு கூட 50 ஆயிரம் பேர் வருவார்களே என்று ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விலங்குநல ஆர்வலர் ராதா ராஜன் பிபிசி சேனலுக்கு பேட்டியளித்துள்ளது தமிழக மக்களிடையே பெரும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தன் கோபத்தின் உச்சக்கட்டத்தை ஒரு வீடியோவாக பதுவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தமிழக மக்களை இழிவுபடுத்திய விலங்குநல ஆர்வலர் ராதா ராஜனை கடுமையாக விமர்சித்து தனது கோபத்தை வெளிபடுத்தியுள்ளார்.
மேலும், இறுதியாக இந்த வீடியோ ராதா ராஜனுக்கு போய் சேரும் வரை தயவு செய்து பகிரவும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்த இளம்பெண்..
வீறுகொண்டு எழுந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்த கனேடிய பிரஜை
எப்படியாவது இந்த வருடத்திலிருந்து வாடிவாசல் திறந்த காளைகளை துள்ளி ஓட வைப்பது என்ற ஒரே கொள்கையுடன் ஆண்,பெண்கள், குழந்தைகள் என ஒன்றிணைந்து போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு வலுச் சேர்க்கும் விதமாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளும் போராட்டங்களை நடாத்தி வருகிறார்கள்.
இவர்கள் எல்லோருக்கும் எனெர்ஜியை தரும் விதமாக இனம், மொழி, மதம் கடந்தும் ஆதரவுக் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு கனடாவிலிருந்து ஒலித்த குரலே இதுவாகும். இந்த நபர் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியது மட்டுமன்றி தனக்கும் ஜல்லிக்கட்டு ரொம்ப பிடிக்கும். உங்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என உற்சாகமாக கூறியுள்ளார்.