தமிழ் சினிமாவால் மகேஷ் பாபுவுக்கு பலத்த அதிர்ச்சி !

148

தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இவர் நடிப்பில் வரும் ஏப்ரல் 7ம் தேதி வெளிவரவிருக்கும் படம் பாரத் அனே நேனு. மகேஷ் பாபுவின் பிரமோற்சவம், ஸ்பைடர் ஆகிய படங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி படு தோல்வி அடைந்தன.

அதனால் இந்த பாரத் அனே நேனு எப்படியாவது இரண்டு மொழிகளிலும் வெளியிட்டு வெற்றி பெற்று விடவேண்டும் என்று ஆசைப்படுகிறார் மகேஷ் பாபு. இந்நிலையில் ராம் சரணின் ரங்கஸ்தலம் படம் தமிழில் வெளியாகி பெரிய அளவில் வசூலை குவித்ததால், ஏப்ரல் 7-ந்தேதி வெளியாகும் தனது படத்தையும் தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வெளியிட மகேஷ்பாபு படக்குழு திட்டமிட்டு தியேட்டர்களை ரெடி பண்ணி வந்தனர்.

ஆனால் தற்போது தமிழ் சினிமா ஸ்டிரைக் நீடித்து வரும் நிலையில், தமிழ்த்திரைப் பட தயாரிப்பாளர் சங்கத்தலைவரான விஷால், தெலுங்கு திரைப் பட தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ஏப்ரல் 8-ந்தேதி முதல் எந்த தெலுங்கு படமும் தமிழ் நாட்டில் ரிலீசாகாது என்று அறிவித்துள்ளனர்.

இந்த திடீர் அறிவிப்பு மகேஷ் பாபுவுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் மனவருத்தத்தில் உள்ளதாக தெலுங்கு படவட்டாரம் தெரிவிக்கிறது

SHARE